செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

விஜய் டிவியில் அவமானப்பட்ட கோபி.. இந்த காரணத்திற்காக தான் சீரியலில் இருந்து விலக நினைத்தார்

புதிதாக எந்த சீரியல் வந்தாலும் முதலில் அதை பார்ப்பதற்கு முக்கிய காரணம் அந்த தொடரில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தான். அவர்களை வைத்து தான் இந்த நாடகத்தை பார்க்கலாம் என்று எண்ணம் தோன்றும். அதன்பிறகு தான் கதை பிடித்து போக ஒவ்வொரு நாளும் அதற்கு நம்ம அடிமையாகி விடுவோம். அப்படி பார்த்தால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடரில் என்னதான் குடும்பங்களை கவரும் கதையை வைத்திருந்தாலும் அதில் நடிக்கும் கோபி கேரக்டருக்காகவே பார்ப்பவர்கள் ஏராளமானவர்கள்.

இந்தத் தொடரில் கோபி ஒன்றும் அந்த அளவுக்கு நல்லவர் எல்லாம் கிடையாது. ஆனாலும் ஏன் இவருக்காக பார்க்கிறார்கள் என்றால் இவர் கொடுக்கும் ரியாக்ஷன் தான். இவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்தாலும் இவரை மிஞ்சிட முடியாது என்று தோன்றும் அளவிற்கு ஒவ்வொரு சூழ்நிலைக்கு தன்னுடைய முகபாவனையை மாற்றிக்கொண்டு அதற்கேற்ற மாதிரி பேசுவது தான் மக்களை அதிகம் கவர்ந்திருக்கிறது.

Also Read: உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

முக்கியமாக பாக்யாவிடம் இருக்கும்பொழுது அவரை பிடிக்காத மாதிரியும், கெத்தாக படித்து சம்பாதிக்கும் ஒரு ஆணாதிக்க திமிருடன் இருந்த கோபியை பார்த்து இவர் ஏன் இந்த மாதிரியான ஒரு கேரக்டரில் இருக்கிறார் என்று கோபப்படும் அளவிற்கு நடித்தார். ஆனால் ராதிகா என்று வரும் போது அப்படியே உல்டாவாக மாறிவிட்டார் என்று சொல்லலாம். தற்போது ராதிகாவிடம் அடிமை மாதிரியான ஒரு வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட இவர் கொஞ்ச நாளுக்கு முன்னாடி இந்த சீரியல் இருந்து நான் விலகுகிறேன். எனக்கு இதுவரை ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றியை சொல்லிக்கிறேன். எனக்கு பதிலாக கோபி கேரக்டரில் வேறு ஒருவர் நடிக்க வருகிறார். தொடர்ந்து உங்களுடைய சப்போர்ட் பாக்கியலட்சுமி சீரியலுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை கேட்ட இவருடைய ரசிகர்கள் மிகவும் ஆர்ப்பாட்டமான எதிர்ப்புகளை கமெண்ட்ஸில் போட்டு வந்தார்கள்.

Also Read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

இவர் ஏன் பாக்கியலட்சுமி இல் இருந்து விலக நினைத்தார் என்றால் இவருக்காக தான் இந்த நாடகம் பார்க்கிறோம் என்று அனைவரும் அறிந்த விஷயமே. அப்படி இருக்கையில் சமீபத்தில் விஜய் டெலிவிஷன் அவார்டு கொடுக்கிற நிகழ்ச்சி நடந்தது. இது பொதுவாகவே வருடத்திற்கு ஒரு முறை எல்லா தொலைக்காட்சிகளிலும் நடைபெறும். அதாவது அவர்கள் நடிப்பிற்கு அங்கீகரிக்கும் கொடுக்கும் விதமாக கௌரவ படுத்துவது தான் இந்த அவார்டு.

அப்படிப்பட்ட அவார்ட் கோபிக்கு கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக பாக்யா மற்றும் ராதிகா இவர்களுக்கெல்லாம் கிடைத்தது நமக்கு கிடைக்கவில்லையே என்று ஒரு ஆதங்கத்தில் தான் அவர் இந்த சீரியலில் இருந்து விலகலாம் என்று நினைத்திருக்கிறார். இதுவே இவருக்கு பெரிய அவமானத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் இவர் இல்லை என்றால் டிஆர்பி ரேட் குறைந்துவிடும் என்று விஜய் டிவி தந்திரமாக யோசித்து அவரை சமாதானப்படுத்தும் விதமாக அவரிடம் கெஞ்சி கூத்தாடி மறுபடியும் நடிக்க வர வைத்திருக்கிறார்கள்.

Also Read: குணசேகரனின் வீழ்ச்சி ஆரம்பம்.. ஜனனி, அரசு செய்ய போகும் தரமான சம்பவம்

Trending News