வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2ம் திருமணத்திற்கு அம்மாவை அழைத்த கோபி.. யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. அதாவது ராதிகா, கோபிக்கு நடக்கவுள்ள திருமண மண்டபத்தில் பாக்யா சமைக்க உள்ளார். முதலில் அதற்கான அட்வான்ஸை வாங்கியவுடன் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்.

ஆனால் புருஷனோட கல்யாணத்துக்கு தான் சமைக்கப் போறோம் என்ற விஷயம் தற்போது வரை பாக்யாவுக்கு தெரியாது. மேலும் ராதிகா குடும்பம் மற்றும் கோபி எல்லோரும் சேர்ந்து கல்யாணத்திற்கான உடைகளை வாங்கி வருகிறார்கள். இவ்வாறு கல்யாணத்தை தடபுடலாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Also Read :பிக் பாஸ் சீசன் 6 கன்ஃபார்மான 9 ஆண் போட்டியாளர்கள்.. ஆண்டவரை சந்திக்க தயாராகும் போட்டியாளர்கள்

இந்நிலையில் கோபி பாக்யாவுக்கு துரோகம் செய்தாலும் தனது அம்மா மற்றும் மகள் இனியா மீது அதீத அன்பு வைத்துள்ளார். இதனால் தனது திருமண விஷயத்தை அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று கோபி ஆசைப்படுகிறார். இதை ராதிகாவிடம் கோபி சொல்ல முதலில் ராதிகா வேண்டாம் என்று மறுக்கிறார்.

அதன் பின்பு கோபியின் நிலைமையை புரிந்து கொண்டு சொல்லுங்கள் என அனுமதிக்கிறார். உடனே கோபி தனது அம்மாவுக்கு போன் போட்டு கோவிலுக்கு வர சொல்கிறார். அதேபோல் ஈஸ்வரி கோயிலுக்கு வந்து தனது மகனை பார்த்தவுடன் ஆற தழுவி கொள்கிறார். இதைத்தொடர்ந்து கோபி நான் சொல்லும் விஷயத்தை கேட்டு அதிர்ச்சியாக கூடாது என கூறுகிறார்.

Also Read :அப்பனைப் போல பிள்ளைக்கும் ரெண்டு தாரம் போல.. சீரியலில் என்ட்ரி கொடுத்த சக்காளத்தி

அதாவது நான் ராதிகாவை கல்யாணம் பண்ணிக்க போறேன், எனக்கு உங்களோட ஆசிர்வாதம் வேணும் அம்மா என கோபி கேட்கிறார். உடனே ஆத்திரமடைந்த ஈஸ்வரி என்னை பாத்தா உனக்கு எப்படிடா தெரியுது, நீ எது செஞ்சாலும் உன்னோட பின்னாடியே வந்துருவேன் என்று நெனச்சியா, இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பாக்குற என்ற சவால் விடுகிறார்.

கோபி அப்படியே எதுவும் சொல்லாமல் அதிர்ச்சியில் உறைகிறார். மேலும் ஈஸ்வரி வீட்டுக்கு போய் நடந்தது எல்லாம் சொன்னால் வீட்டில் பிரளயமே வெடிக்க உள்ளது. ஆனால் எந்த பிரச்சனை வந்தாலும் பாக்கியா தான் எடுத்த ஆர்டரை சரியாக முடித்து விட வேண்டும் என்று தன்னுடைய புருஷன் கல்யாணத்துக்கே சமைக்க உள்ளார்.

Also Read :ஓவர் நைட்டில் ஒபாமா ரேஞ்சுக்கு பில்டப் செய்யும் கதிர்.. குரளி வித்தை பிரமாதம் முல்லை

Trending News