வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ரஞ்சித்தை பார்த்து காண்டாகிய கோபி.. மனதிற்குள்ளே புலம்பித் தவித்த நிலைமை

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி நடிப்பிற்கு அடுத்தபடியாக அதிக அளவில் ரசிக்கும்படியாக அமைவது அந்த வீட்டில் இருக்கும் நிலா பாப்பாவின் நடிப்புதான். அந்த பாப்பா கொடுக்கும் ஒவ்வொரு ரியாக்ஷனும் இந்த நாடகத்திற்கு மிகப்பெரிய சிறப்பாக அமைகிறது. அந்த வகையில் இப்பொழுது இந்த பாப்பாவின் பிறந்தநாளை வீட்டில் கொண்டாடுவதற்காக ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாக்கியா இங்கிலீஷ் டியூசனில் உள்ள நண்பர்களை அனைவரையும் அழைத்திருக்கிறார். பின்பு அவர்கள் இதில் கலந்துகொண்டு விழா நல்லபடியாக நடைபெற்று முடிந்தது. அடுத்ததாக இவர்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிடும் நேரத்தில் பாக்யாவின் பெண் நண்பர் ஒருவர் எல்லாரையும் பார்த்துட்டேன் உங்க கணவரை மட்டும் எங்கே போனார்கள் என்று கேட்கிறார்.

Also read: சுக்கு நூறாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. ஜீவாவை தொடர்ந்து தலை முழுகிய அடுத்த தம்பி

அதற்கு பாக்யா, கோபியுடன் விவாகரத்து ஆன விஷயத்தை சொல்கிறார். இதை கேட்ட அவர் மிகவும் வருத்தத்துடன் நான் இதைப் பற்றி கேட்டு உங்களை ரொம்பவும் கஷ்டப்படுத்தி விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறினார். அதன் பிறகு இவர்கள் அனைவரும் கிளம்பும்போது பாக்கியா, தன்னம்பிக்கையுடன் இருப்பதை நினைத்து ரஞ்சித் அவரை பாராட்டி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது கடைக்கு போய் காய்கறி வாங்க வீட்டை விட்டு வெளியே வந்த கோபி, பாக்யா மற்றும் ரஞ்சித் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆகிறார். அடுத்ததாக அவர்கள் பக்கத்தில் எழில் போன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபி மனதிற்குள் டே உங்க அம்மாவை பாருடா நீ யார்கிட்ட போன் பேசிட்டு இருக்க என்று புலம்புகிறார். ஆனாலும் இதை பார்த்த கோபி எதுவும் சொல்ல முடியாமல் அந்த இடத்தில் இருந்து கடுப்பாகி கிளம்பி விட்டார்.

Also read: கட்டின பொண்டாட்டியையும், பிள்ளையையும் கண்டுக்காத குணசேகரன்.. உயிருக்கு போராடும் ஈஸ்வரி

அடுத்ததாக இதுவரை அம்மாவுடைய பாசம் என்றால் எந்த அளவு உண்மையானது என்று தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த இனியா, பிறந்தநாள் நிகழ்ச்சியை முடித்து போகும் பொழுது இப்பதான் உன்னுடைய அருமை எனக்கு புரிகிறது மிஸ் யூ அம்மா என்று பாக்கியாவின் கன்னத்தில் முத்தமிட்டு ராதிகா வீட்டிற்கு போய்விட்டார்.

பிறகு பாக்கியா, இனியா ஏன் இப்படி சொன்னா? அவள் நல்லா இருக்காளா? இல்லையென்றால் அவளுக்கு அந்த வீட்டில் ஏதேனும் பிரச்சினையா? வேறு ஏதாவது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாளா? என்று கண்கலங்கும்படியாக பேசுகிறார். இதை கேட்ட ஈஸ்வரி அவள் கூட தாத்தா இருக்காரு அவர் எதனாலும் பார்த்து பாரு என்று பாக்கியாவிற்கு ஆறுதல் கூறுகிறார்.

Also read: சுந்தரி, கண்ணம்மா நடித்துள்ள N4 படம் எப்படி?. அனல் பறக்கும் விமர்சனம் இதோ!

Trending News