வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சைடு கேப்பில் கோபி அங்கிள் செய்த மட்டமான வேலை.. இது என்னடா இனியாவுக்கு வந்த புது சோதனை

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் இப்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இதில் பாக்யாவின் மகள் இனியா தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தில் உள்ளார். இதற்காக அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது. ஆனால் ஒரு நிச்சயதார்த்த ஆர்டர் காரணமாக பாக்யா சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.

அவர் செய்த சமையலில் பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாக நிச்சயதார்த்தம் நிற்கும் அளவுக்கு சென்று விட்டது. அந்த சமயத்தில் பாக்யாவின் மாமனார் மற்றும் பழனிச்சாமி அங்கு சென்று பாக்யாவுக்கு ஆறுதல் கூறுகிறார்கள். மேலும் பழனிச்சாமியின் உறவினர் அங்கு இருந்ததால் எப்படியோ பாக்யாவை இந்தப் பிரச்சினையில் இருந்து மீட்டு விட்டார்.

Also Read : டிஆர்பி-யை எகிற வைக்க வரும் பிக்பாஸ் சீசன் 7.. தரமான 10 போட்டியாளர்களை இறக்கும் விஜய் டிவி

மேலும் பள்ளியில் பாராட்டு விழா நடக்கும் போது பாக்யா வராத காரணத்தினால் இனியா மிகுந்த கோபத்தில் இருக்கிறார். அப்போது சைடு கேப்பில் இனியாவுக்கு அம்மாவாக ராதிகாவை மாற்றி மேடையில் நிற்க வைக்கிறார் கோபி அங்கிள். இது இனியாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் மௌனம் காத்து வருகிறார்.

அடுத்ததாக பாக்யா வீட்டின் அக்கம் பக்கத்தினர் எல்லோரும் ஒன்றாக இணைந்து காலனியில் இனியாவுக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள். அப்போதும் பாக்யா வராத காரணத்தினால் கோபி மற்றும் ராதிகா தான் இனியாவின் பெற்றோர்களாக வந்து நிற்கிறார்கள். கடைசி நிமிடத்தில் பாக்யா வந்து நிற்கிறார்.

Also Read : இந்த வார டிஆர்பி-யில் ரணகளம் செய்த டாப் 10 சீரியல்கள்.. மோதிக் கொள்ளும் சன் மற்றும் விஜய் டிவி

மேலும் இனியா, பாக்யா மீது உள்ள கோபத்தின் காரணமாக கையை உதறிவிட்டு செல்கிறார். அதன் பிறகு நிச்சயதார்த்த வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் பாக்யா சொன்ன பிறகு மொத்த குடும்பமே அதிர்ச்சி அடைகிறார்கள். ஒருவழியாக இனியாவும் அம்மாவின் நிலைமையை புரிந்து கொண்டு சமாதானம் ஆகிறார்.

மறுபுறம் கோபியின் மாமியார் ஏன் பாக்யா அங்கு வரவில்லை என்று கேள்வி கேட்கிறார். அதற்கு கோபி பழனிச்சாமி உடன் சுத்த தான் பாக்யாவுக்கு நேரம் இருக்கிறது என கண்டபடி பேசுகிறார். முன்னாடி எல்லாம் பசங்க தான் முக்கியம் என்று சொல்லிக் கொண்டிருந்த பாக்யாவுக்கு இப்போது பழனிச்சாமி தான் முக்கியம் என கோபி சாடி வருகிறார். ஆனால் ராதிகா இப்போதும் பாக்யா மீது உள்ள மரியாதை காரணமாக அவர் மீது எந்த தப்பும் இருக்காது என்பதை நம்புகிறார்.

Also Read : கமலால் தாமதமாகும் பிக் பாஸ்.. கேஎஸ் ரவிக்குமாரை லாக் செய்த விஜய் டிவி

Trending News