Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தான் என்ன பண்ணாலும் ராதிகா தன்னுடன் இருப்பார் என்று தவறாக கணக்குப் போட்ட கோபி, பாக்யா வீட்டிற்கு ராதிகாவை கூட்டிட்டு போய் அவரோட குடும்பத்துடன் கும்மி அடித்தார். இதனால் பார்த்து கடுப்பான ராதிகா நீயும் வேண்டாம் உன் சாகவாசமும் வேண்டாம் என்று பெரிய கும்பிடு போட்டு கோபியை விட்டு போய்விட்டார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கோபி ,ராதிகாவை தேடி கெஞ்ச போய்விட்டார். ஆனால் ராதிகா, தான் எடுத்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன். இனி நீங்களும் வேண்டாம் உங்கள் குடும்பமும் என்னை அவமானப்படுத்த தேவையில்லை. என்னையும் என் மகளையும் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும். எனக்கு ஒரு நல்லது பண்ண வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் என்னுடைய வீட்டிற்கு வர வேண்டாம்.
என்னுடைய மகளை பார்த்து பாச ட்ராமாவையும் போட வேண்டாம் என்று கோபியை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதனால் விரக்தி அடைந்த கோபி மறுபடியும் குடிக்க ஆரம்பித்து நிதானம் இல்லாமல் பாக்யா வீட்டிற்கு போய்விடுகிறார். அங்கே கோபி நிலைமை பார்த்ததும் பாக்யா பரிதாபப்படுகிறார். உடனே இதுதான் சான்ஸ் என்று ஈஸ்வரியும் கோபிக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக அவன் என்ன பண்ணுவான் எல்லாரும் சேர்ந்து அவனை ஏன் இப்படி அலைக்கழிக்கீங்க.
யார் என்ன சொன்னாலும் என் பையனை விட்டுட்டு என்னால் இருக்க முடியாது, அவனை நான் அப்படி விடவும் மாட்டேன். அவன் கூட எப்பொழுதும் நான் இருப்பேன் என்று கோபிக்கு ஜால்ரா பண்ண ஆரம்பித்து விட்டார். இதற்கிடையில் கோபி, குடித்துவிட்டு வந்ததால் நிதானத்தை இழந்து ராதிகா என்னை விட்டுப் போனது தப்பு. நான் அவளுக்காக இவ்வளவு விஷயங்கள் பண்ணியிருக்கிறேன்.
ஆனால் அவள் என்னை பற்றி யோசிக்கவில்லை, ராதிகா விட பாக்கிய தான் பெஸ்ட் என்பதற்கு ஏற்ப கோபியை ராதிகா துரத்தியதால் பாக்கியாவிடம் தஞ்சம் அடைவதற்கு பிளான் பண்ணி பாக்கியாவின் மனசில் இடம் பிடிக்க ஐஸ் வைக்கிறார். பாக்கியா, கோபியின் செயல்களை கண்டு கோபப்படாமல் பரிதாபப்பட்டு நிற்கிறார்.
ஆனாலும் கோபியை எப்படியாவது ராதிகாவுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு பண்ணிய பாக்கியா விடிஞ்சும் விடாமலும் ராதிகாவின் வீட்டு வாசலில் காவல் காக்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் ராதிகாவின் அம்மாவை பார்த்து பேசும் வகையில் எப்படியாவது கோபியுடன் உங்கள் மகளை சேர்த்து வைக்க வேண்டும் என்று இருவரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். ராதிகாவுக்காக இல்லாவிட்டாலும் கோபி அவஸ்தைப்படுவதை பார்த்து தாங்க முடியாத பாக்யா, ராதிகாவை சமாதானப்படுத்த போகிறார்.