திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பாக்யாவை தவறாக புரிந்த கோபி.. என்னைய பழிவாங்க இப்படி ஒரு முடிவா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு தொடராக அமைந்து வருகிறது. இதில் பாக்கியா ஆங்கிலம் பேசுவதற்காக டியூஷன் போய்க் கொண்டிருக்கிறார். அங்கே இவருக்கு பழனிச்சாமி மற்றும் மற்றொரு தோழியும் நண்பர்களாக கிடைத்திருக்கிறார்கள். பிறகு அந்த டியூஷனுக்கு இரண்டு நாட்களாக பழனிச்சாமி வரவில்லை.

இதனால் அவருக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை. பிறகு இருவரும் அவருடைய வீட்டிற்கு நேரடியாக சென்று பார்த்து வரலாம் என்று கிளம்புகிறார்கள். இவருடைய வீடு எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருப்பதால் அவரிடமே போன் பண்ணி விசாரித்து வீட்டிற்கு போய்விடுகிறார்கள். அங்கே பழனிச்சாமி உடைய அம்மா உடம்பு சரி இல்லாம இருப்பதனால் தான் வரவில்லை என்று தெரிந்து கொள்கிறார்கள்.

Also read: உயிரைக் காப்பாற்றும் ராதிகா.. உருட்டுறதுக்கு கதையில்லாமல் சன் டிவியை பாலோ செய்யும் விஜய் டிவி

பிறகு பாக்கியா அவரின் அம்மாவை பார்த்து பேசிய போது அவர் கூறியது இன்னும் என் மகனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற வருத்தம் தான் எனக்கு அதிகமாக இருக்கிறது. அதனாலயே எனக்கு அடிக்கடி உடம்பு இப்படி சரியில்லாமல் போய்விடுகிறது என்று மன வருத்தத்தை சொல்லி புலம்புகிறார். இதை கேட்ட பாக்கியா நீங்க எதையும் நினைத்து கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும் கூடிய சீக்கிரமே பழனிச்சாமிக்கும் திருமணம் நடக்கும் என்று ஆறுதலாக பேசுகிறார்.

அடுத்ததாக பழனிச்சாமிடம் அம்மாவை சந்தோஷப்படுத்துகிற மாதிரி சில விஷயங்களை நீங்கள் பண்ணுங்க அப்பதான் அவங்களும் கவலைகளை மறந்து இருப்பாங்க என்று கூறி கிளம்புகிறார். அப்பொழுது வாசல் வரை வந்த பழனிச்சாமி வெளியே இருந்து பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் கோபி அந்த இடத்திற்கு வருகிறார்.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

இப்பொழுது இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோபி மிகவும் ஷாக்காகி என்னடா பாக்கியா இவருடைய வீட்டிற்கு நேரடியாக வந்து பேசிகிட்டு இருக்கா. நான் ராதிகாவை திருமணம் செய்ததை எல்லாரும் தப்பு என்று சொல்லி என்னவெல்லாம் பேசினாங்க. இவா பண்றது மட்டும் தப்பா தெரியலையா, இல்ல அவங்களுக்கு இது கண்ணில் படவில்லையா என்று புலம்புகிறார். இல்லையென்றால் நான் பண்ணுன மாதிரியே இவளும் என்னை பழிவாங்குவதற்கு ஏதாவது செய்யப் போகிறாரா என்று பாக்கியா மீது சந்தேகப்படுகிறார்.

இதை இதோடு நிறுத்திக் கொள்ளாமல் வீட்டிற்கு குடித்து விட்டு வருகிறார். அப்பொழுது அங்கே இருந்த எழிலிடம் உன் அம்மா என்னடா இப்படி பண்ணிக்கிட்டு இருக்க இதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியலையா என்கிட்ட மட்டும் எப்போது வெறப்பா மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு என் அம்மா பத்தி ஏதாவது தப்பா பேசினா உங்களுக்கு அவ்வளவுதான் அப்படின்னு கோபப்படுகிறார். பிறகு இவர்களுக்குள் பெரிய சண்டையே ஆரம்பித்து விடுகிறது.

Also read: அடுத்த தில்லாலங்கடி வேலையை பார்க்கும் குணசேகரன்.. தவிடு பொடியாக ஆக்கப் போகும் ஜனனி

Trending News