வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இனியாவை வைத்து டபுள் கேம் ஆடும் கோபி.. பாக்கியாவுக்கு பிடித்த பைத்தியம்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கோபி உடன், பாக்யா சேர்ந்து வாழ முடியாது என அவரை விவாகரத்து செய்து விட்டார். விவாகரத்து ஆன கையோடு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் கோபி இருக்கிறார்.

கோபி செய்த தவறை அனைவரும் மறந்துவிட்டு, விவாகரத்து பெற்ற பாக்யாவால்தான் குடும்பம் பிரிந்தது என குடும்பமே அவரை குற்றவாளியாக பார்க்கிறது. இன்னிலையில் பள்ளியிலிருந்து இனியா தன்னுடைய அப்பா கோபியுடன் கிளம்பி சென்று விடுகிறார்.

Also Read: ஸ்கூல் பீஸ், இபி பில் என ஒரு வாரமா வச்சு செய்யும் பாக்யா.. சுயமரியாதை காப்பாற்ற எடுத்த சவால்

ஸ்கூலுக்கு போன இனியா மாலை ஆனபிறகும் வீட்டுக்கு வரவில்லையே என்று பாக்யா ரோடு ரோடாக அலைந்து திரிந்து, பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு மாறுகிறார். இனியவை வைத்து டபுள் கேம் ஆடும் கோபி, போன் செய்து பேசும் செழியனிடம் இனியவை அழைத்து வந்த விஷயத்தை கூறுகிறார்.

உடனே இந்த விஷயத்தை பாக்யாவிடம் சொல்லமறந்த செழியன், இரவு வரை பாக்யா இனியவை குறித்து வருத்தம் அடைகிறார். ஒருகட்டத்தில் போலீசுக்கு செல்லலாம் என்று வேலைக்காரி செல்வி மற்றும் பாக்யா இருவரும் முடிவெடுக்கின்றனர்.

Also Read: ஒரே நேரத்தில் அப்பனுக்கும் மகனுக்கும் பேசப்படும் கல்யாணப் பேச்சு.. மானங்கெட்ட குடும்பமா இருக்கே

அந்த சமயம் இனியா, கோபியுடன் ஊர் சுற்றிவிட்டு காரில் வந்து இறங்குகிறார். கோபத்தில் பாக்யா இனியாவை திட்டுகிறார். ‘ஒரு வார்த்தை சொல்லி விட்டு போய் இருக்கலாமே’ என்று இனியாவிடம் பாக்யா கேட்டுக்கொண்டே அழுகிறார்.

இப்படி கணவருடன் சேர்ந்து பிள்ளைகளும் பாக்யாவை இந்த சீரியலில் வதைக்கின்றனர். கோபியின் காதல் விவகாரம் தெரிந்தபோது எப்படி வீறுகொண்டு பாக்யா எழுந்தாரோ, அந்த பாக்யாவை தான் சீரியல் ரசிகர்கள் விரும்புகின்றனர். ஆனால் இப்போது இருக்கும் வெகுளியான பாக்யாவை பார்ப்பதற்கு எரிச்சல் தான் வருகிறது.

Also Read: டிஆர்பி-யில் தூள் கிளப்பும் சன் டிவி.. டாப் 5லிருந்து துரத்தப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்

Trending News