Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியின் அம்மா தான் ஓவராக டிராமா போடுகிறார் என்று பார்த்தால் இவரை விட அதிகமாக குதிக்கும் ராதிகாவின் அம்மா. ஒன்னுக்கு ஒன்னு சழிச்சவங்க இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப மாத்தி மாத்தி ட்ராமாவை போடுகிறார்கள். இவர்கள் போடும் டிராமாவை நம்பி ராதிகா ஒரு பக்கம் அவருடைய அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி வருகிறார்.
இன்னொரு பக்கம் என் அம்மாவுக்கு போக தான் மற்றவர்களுக்கு உரிமை என்று கோபி ஈஸ்வரிக்கு சப்போர்ட் பண்ணுகிறார். இதனால் கோபிக்கும் ராதிகாவுக்கும் பெரிய வாக்குவாதம் நடக்கிறது. ராதிகா கோபி இடம் உங்க அம்மா நாளைக்கு இந்த வீட்டை விட்டு போயிருக்க வேண்டும் என்று சொல்கிறார். அதற்கு கோபி ஏன் அம்மா ஏன் போக வேண்டும் எனக்குன்னு இருக்கிறவங்க இந்த விட்டில அவங்க ஒருத்தங்க தான் என்று சொல்கிறார்.
மருமகளை சமாளிக்கும் பாக்கியா
வேண்டுமென்றால் உங்க அம்மாவை போக சொல்லு என்று முணுமுணுக்கிறார். இதை கேட்ட ராதிகாவின் அம்மா கமலா ஒரு ட்ராமாவை போடுகிறார். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது உள்ளே நுழைந்த கமலா நான் இந்த வீட்டை விட்டு போகிறேன். எனக்கு மதிப்பு மரியாதையும் இல்லாத இந்த வீட்டில் நான் ஏன் இருக்க வேண்டும். அதனால் என் பையன் சந்துரு வீட்டுக்கு போகிறேன் என்று சொல்கிறார்.
அதே நேரத்தில் ராதிகா உன்னை கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் உன்னை விட்டு போவது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் எனக்கு வேறு வழி இல்லை என்று ராதிகாவை ஏற்றி விடுகிறார். உடனே ராதிகா நீ ஏன்மா போகணும். கோபி அம்மா காலையில இங்கிருந்து கிளம்பி விடுவாங்க என்று சொல்கிறார். அதற்கு கோபி எங்க அம்மா எங்க போவாங்க என்று கேட்க, ராதிகா அதுதான் பாக்யா வீடு இருக்கிறது அல்லவா அங்க போக சொல்லுங்க என்று சொல்கிறார்.
அப்படி எல்லாம் எங்க அம்மாவை போக சொல்ல முடியாது. என் கூட தான் எங்க அம்மா இருப்பாங்க என்று கரராக சொல்லி விடுகிறார். உடனே கோபி, அம்மா இதெல்லாம் கேட்டிருப்பாங்களோ என்ற பயத்துடனே ஈஸ்வரியை பார்க்கப் போகிறார். அதே மாதிரி ஈஸ்வரி அனைத்தையும் கேட்டு விடுகிறார். உடனே இதை வைத்து சென்டிமென்ட் ட்ராமாவை போடுகிறார்.
அதே மாதிரி ராதிகா அம்மாவும் நான் இங்கு இருந்து போகிறேன். என்னால தரையில தூங்க முடியாது கால் வலிக்கிறது என்று சொல்கிறார். உடனே ராதிகா நீங்கள் எல்லோரும் என்னுடன் படுத்துக் கொள்ளுங்கள். கோபி வெளியே போய் தரையில் தூங்கட்டும் என்று சொல்கிறார். ஆக மொத்தத்தில் கோபி மற்றும் ராதிகா மாமியார்களுடன் சிக்கித் தவிக்கிறார்கள்.
இதனை அடுத்து ஜெனிக்கும் அமிர்தவிற்கும் ஏதோ பிரச்சனை என்று பாக்யா புரிந்து கொள்கிறார். அதன்படி அமிர்தாவிடம் கேட்டு கொஞ்சம் ஜெனியை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. எல்லாம் சரியா போயிடும் பழையபடி ஜெனி மாறிவிடுவார் என்று அமிர்தாவை சமாதானப்படுத்துகிறார். ஆனால் ஜெனியை பார்க்கும் பொழுது பொறாமையில் ஆரம்பித்தது கடைசியில் பிரச்சனையாக முடியும் போல தெரிகிறது.
தினந்தோறும் ராதிகாவிடம் போராடும் கோபி
- கோபிக்கு கெடு வைத்த சக்காளத்தி குடும்பம்
- கோபி வச்ச ஆப்பு பாக்கியாவுக்கு இல்ல ராதிகாவுக்கு
- சர்ச்சையான கேள்விக்கு கோபியின் மானசீக காதலி கொடுத்த பதிலடி