Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகாவை தேடிப்போன கோபி ராதிகாவை சமாதானப்படுத்தும் விதமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஈஸ்வரி போன் பண்ணி எனக்கு செய்து கொடுத்த சத்தியம் ஞாபகம் இருக்கிறது தானே. என் கூடவே இருப்பேன் என்று சொல்லி இருக்கிறாய் அதை மறந்துட்டியா என்று கேட்கிறார். உடனே கோபி நான் எதையும் மறக்கவில்லை, நான் அங்கே வந்து விடுவேன் என்று சொல்லிவிடுகிறார்.
அதே நேரத்தில் ராதிகாவிடம் இப்பொழுது நான் இந்த வீட்டில் எங்கே இருக்க முடியாது. ஆனாலும் உங்களை விட்டும் என்னால் பிரிந்திருக்க முடியாது. அதனால் நீயும் மயூவும் கிளம்பி என்னுடன் வாங்க. நாம் அனைவரும் அந்த வீட்டில் சந்தோஷமாக இருக்கலாம் என்று கூப்பிடுகிறார். ஆனால் ராதிகா அந்த வீட்டில் எங்கே எனக்கு சந்தோசம் கிடைக்கும். நீங்கள் இங்கே வரவில்லை என்றாலும் பரவாயில்லை அதற்காக எங்களை அங்கே கூப்பிட்டு கஷ்டப்படுத்தாதீர்கள் என்று சொல்லிவிடுகிறார்.
ஆனாலும் பிடிவாதமாக இருந்த கோபி ராதிகாவிடம் கெஞ்சி கூப்பிடுகிறார். இதில் நான் மனசு மாறவே மாட்டேன் என்பதற்கு ஏற்ப ராதிகாவும், உங்களுடன் பாக்யா வீட்டில் வந்து இருக்க முடியாது என்று கூறிவிட்டார். உடனே கோபி நெஞ்சை பிடித்துக் கொண்டு நெஞ்சுவலி வந்தது போல் கொஞ்சம் டென்ஷனாக பேசி அங்கே இருப்பவர்களை பயமுறுத்தி விடுகிறார்.
கோபி நெஞ்சு வலியால் அவஸ்தப்படுவதை பார்த்து ராதிகாவும் எமோஷனலாக நம்பி விடுகிறார். உடனே ராதிகா மயூவை கூட்டிட்டு கோபியுடன் கிளம்பி விடுகிறார். இது எதுவும் தெரியாத ஈஸ்வரி, கோபியை பார்த்ததும் சந்தோஷப்பட்டு கொள்கிறார். அதன்பிறகு ராதிகா மற்றும் மயூ வந்திருக்கிறார்கள் என்றதும் இவர்களை இங்கே எதற்கு கூப்பிட்டு வந்தாய் என்று சண்டை போட ஆரம்பித்து விடுகிறார்.
இதனால் ஈஸ்வரி வாயை எப்படி அடைப்பது என்று தெரியாத கோபி, மறுபடியும் நெஞ்சு பிடித்துக் கொண்டு நெஞ்சுவலி வந்தது போல் ஒரு டிராமாவை போட்டு விடுகிறார். இதனை பார்த்து பதறிப் போன ஈஸ்வரி நீ எதுவும் பேசி டென்ஷன் ஆக வேண்டாம். நானும் எதைப் பற்றியும் கேட்க மாட்டேன், நீயும் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிய நிலையில் கோபி நைஸ் ஆக ராதிகா மற்றும் மயூவை ரூமுக்குள் போக சொல்லி விடுகிறார்.
ஆக மொத்தத்தில் ஒரு நெஞ்சுவலியை வைத்துக்கொண்டு பொண்டாட்டியையும் அம்மாவையும் ஏமாற்றி ஒரே கல்லில் இரண்டு மாங்காவுக்கு குறி வைத்துவிட்டார். ஆனாலும் ராதிகா ரூம்குள் போகும் பொழுது பாக்யாவிடம் வேற வழி இல்லாமல் வந்து விட்டேன் என்று சொல்வதற்கு ஏற்ப சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். பாக்யாவும் எல்லாம் கைமீறி போய்க்கொண்டிருக்கிறது இதில் நாம் தலையிடுவதற்கு ஒன்னும் இல்லை என்பதற்கு ஏற்ப வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டார்.
இதோடு நிறுத்தப் போவதில்லை ஒரே வீட்டில் இனி கும்மாளம் போடும் வகையில் பாக்யா மற்றும் ராதிகா இருவரும் சேர்ந்து ஈஸ்வரியை ஆட்டிப் படைக்கப் போகிறார்கள்.