புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சொந்த காசிலே சூனியம் வச்சிக்கிட்ட கோபி.. அனுபவி ராஜா அனுபவி

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவை வெறுப்பேற்றுவதற்காகவே அவர்கள் தங்கி இருக்கும் தெருவிலேயே குடிவந்த கோபி-ராதிகாவின் அழுச்சாட்டியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் மகள் இனியாவின் கண் முன்னே ராதிகாவின் மகளை கோபி பள்ளிக்கு அழைத்து செல்வது குடும்பத்தினருக்கு வேதனை அளிக்கிறது.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத கோபி, பாக்யாவை பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு இனியாவின் மனதை கஷ்டப்படுத்துகிறார். மேலும் பாக்யா விவாகரத்து செய்த பின் இந்த வீட்டிற்க்காக செலவு செய்த 40 லட்சத்தை கோபியிடம் விட்டு எரிவதாக சபதமிட்டார்.

Also Read: கோபிக்கு தரமான சவுக்கடி கொடுத்த பாக்யா.. இனிமேதான் சம்பவம் இருக்கு

அதன் முதல் தொகையாக 40 ஆயிரத்தை அவருடைய அக்கவுண்டில் அனுப்பி வைத்து கோபிக்கு சவுக்கு அடி கொடுக்கிறார். இதையெல்லாம் பார்த்த கோபி, ‘பாக்யா திமிர் பிடித்தவள்’ என்று நண்பரிடம் அவரை மென்மேலும் குறை கூறுகிறார்.

அதேசமயம் கல்லூரி காதலியை திருமணம் செய்து கொண்டு ஜாலியாக ரொமான்ஸ் வாழ்க்கையை துவங்க நினைத்த கோபிக்கு, அனுதினமும் சாப்பாடு கொடுமையாக இருக்கிறது. சாண்ட்வெச், ஓட்ஸ், உப்புமா என டிபன் மட்டுமே கண்ணில் காட்டிக் கொண்டிருக்கும் ராதிகா, கோபிக்கு மதிய உணவை கட்டிக் கொடுக்காமல் கடையில் வாங்கி சாப்பிட சொல்கிறார்.

Also Read: இருக்கிறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்ட கோபி.. கடைசியில இப்படி ஆயிடுச்சு

ஆனால் பாக்யா இத்தனை வருடங்களாக வகை வகையாக சமைத்துக் கொடுத்து ஆபிசுக்கு அனுப்பிய நிலையில், காதலியை திருமணம் செய்து கொண்ட பிறகு கோபிக்கு வாய்க்கு ருசியாக சாப்பாடு கிடைக்காமல் அவதிப்படுகிறார். 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த மனைவி, பிள்ளைகள், வயதான அப்பா அம்மா அனைவரையும் புறக்கணித்து சுயநலமாக முடிவெடுத்த கோபிக்கு இதெல்லாம் வேண்டும்தான்.

சொந்த காசிலே சூனியம் வச்சிக்கிட்ட கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு இனி தான் படாத பாடுபட போகிறார். அதையெல்லாம் பார்ப்பதற்கு சின்னத்திரை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Also Read: ஆசையை எல்லாம் குழி தோண்டி புதைத்த ராதிகா.. நடுரோட்டில் சர்க்கஸ் காட்டும் புது மாப்பிள்ளை

Trending News