Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியாவிடம் மனசு விட்டு பேசி எப்படியாவது திரும்ப பாக்யாவிடம் ஒட்டி கொள்ள வேண்டும் என்று கோபிக்கு ஆசை வந்து விட்டது. அதனால் பாக்கியம் போகும் இடத்துக்கு எல்லாம் பின்னாடியே கோபியும் போகிறார். கிடைக்கிற கேப்பில் எல்லாம் பாக்யாவிடம் பேசி சைட் அடிக்க ஆரம்பிக்கிறார்.
அந்த வகையில் பாக்கியா நடைபயிற்சி போகும்பொழுது கோபி உன்னை பற்றி முழுசாக தெரிந்து கொள்ளாமல் நான் அவசரப்பட்டு உன்னை விட்டு போய் விட்டேன். உன்னிடம் இவ்வளவு திறமையும் அறிவும் இருப்பது தெரிந்திருந்தால் நான் உன்னை விட்டு போயிருக்க மாட்டேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். இதை ராதிகா கேட்ட பின்பு வீட்டுக்கு போய் இனிமேலும் நாம் இந்த வீட்டில் இருந்தால் சரியாக இருக்காது.
நம் இந்த வீட்டை காலி பண்ணி வேற வீட்டுக்கு போக வேண்டும் என்று மயூ முன்னாடி ராதிகா, அம்மாவிடம் சொல்கிறார். அதற்கு ராதிகா அம்மா, நாம் ஏன் காலி பண்ண வேண்டும் மயூ எப்படி அவர் டாடி இல்லாம எப்படி இருப்பாள், கோபி திரும்ப வந்துடுவார் என்று சொல்கிறார். அத்துடன் மயூவை கோபிக்கு போன் பண்ணி பேச சொல்கிறார். உடனே ராதிகா, அப்படி ஒன்றும் கோபி வரத் தேவையில்லை என்று சொல்லி மயூ போன் பண்ண வேண்டாம் என தடுத்து விடுகிறார்.
அடுத்ததாக ஈஸ்வரி, பாக்யா சமைத்த சாப்பாட்டை தட்டில் வைத்துக் கொண்டு நான் ரூமுக்குள் போய் சாப்பிட்டு கொள்கிறேன் என்று சாப்பாட்டு தட்டை எடுத்துட்டு போய் விடுகிறார். உள்ளே போனதும் பாக்யா உனக்கும் சேர்த்து தான் சமைத்து இருக்கிறாள். இந்தா சாப்பிடு என்று பொய் சொல்லி கோபியை சாப்பிட வைத்து விடுகிறார். இதை பார்த்த செல்வி, பாக்கியவிடம் வந்து சொல்கிறார்.
ஆனால் பாக்கியா இதற்கு எதுவும் பண்ண முடியாததால் அமைதியாகி விடுகிறார். அந்த நேரத்தில் ராதிகா, கோபியை பார்த்து பேசுவதற்காக வீட்டுக்குள் வருகிறார். ஆனால் ராதிகாவை பேசக்கூடாது என்று ஈஸ்வரி தடுக்கிறார். பிறகு பாக்கியா, ஈஸ்வரியை கொஞ்சம் அமைதியாக இருக்க சொல்லிவிட்டு ராதிகாவை நீங்க போய் கோபியை பார்த்து பேசுங்க என்று அனுப்பி வைக்கிறார்.
அப்படி பேசும் பொழுது கூட கோபி, பாக்கியா பற்றி தான் பேசி ராதிகாவின் மனசை கஷ்டப்படுத்துகிறார். உடனே ராதிகா இனிமேல் இந்த ஆளு நமக்கு தேவையே இல்லை என்று முடிவு பண்ணி கோபியை விட்டு விலகிவிடலாம் என்று முடிவு எடுத்து விடுகிறார். அதே மாதிரி வீட்டுக்குள் இருந்து பாக்கியவை கோபி ஓரக்கண்ணால் சைட் அடித்துக் கொண்டிருக்கிறார்.
இதை பார்த்த செல்வி, பாக்யாவிடம் சொல்கிறார். உடனே இதற்கு முடிவு கட்டும் விதமாக கோபியை கூப்பிட்டு பாக்கியா உங்களுக்கு இப்பொழுது உடம்பு சரி ஆகிவிட்டது. இங்கே ஜாலியா இருந்திடலாம் என்று நினைக்கிறீர்களா,? எப்பொழுது இங்கே இருந்து கிளம்புவீங்க, நீங்களா போகவில்லை என்றால் நான் அனுப்ப வேண்டியது வரும். பார்த்துக்கோங்க என்று சொல்லி கோபி ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
ரெண்டு பெண்களின் வாழ்க்கையும் பாழாக்கிய கோபி கடைசியில் பொண்டாட்டியே இல்லாமல் சன்னியாசியாக நடுத்தெருவில் நிற்கப் போகிறார். இதுதான் பாக்யா மற்றும் ராதிகா சேர்ந்து கோபிக்கு கொடுக்கும் சரியான தண்டனையாக இருக்கப் போகிறது.