திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஆணவத்தில் ஆடிய கோபிக்கு எழில் வச்ச ஆப்பு.. எப்பவுமே பாக்கியா பிள்ளை தானே நிரூபித்து காட்டிய மகன்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், எல்லாத் தவறும் கோபி மீது இருந்தும் பாக்கியாவின் சந்தோஷத்தை கெடுக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் கோபிக்கு சரியான பதில் அடியாக எழில் தற்போது மிகப்பெரிய ஆப்பு வச்சு விட்டார். அதாவது கோபியை பொறுத்தவரை பிள்ளைகளை தன் பக்கம் இழுத்து விட்டால் பாக்கியா ஆதரவு இல்லாமல் தனி மரமாக ஆகிவிடுவார் என்ற அல்ப ஆசையில் பல சூழ்ச்சிகளை செய்து வந்தார்.

அதன்படி கோபி விரித்தவலையில் செழியன் மற்றும் இனியா சிக்கிவிட்டார்கள். அதே மாதிரி எழிலையும் சிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கோபி அவருக்கு தெரிந்த நண்பர் மூலம் எழிலுக்கு படம் எடுப்பதற்கு சான்ஸ் வாங்கி கொடுத்தார். ஆனால் அங்கு தான் கோபி ஒரு செக் வைத்தார். அதாவது எழில் இயக்கப் போகும் படத்திற்கு படபூஜைக்கு பாக்கியாவை தவிர மற்ற அனைவரும் வரலாம் என்று தயாரிப்பாளர் மூலம் எழிலுக்கு கண்டிஷன் போட்டு விட்டார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத எழில் அதிர்ச்சியாகி கோபியிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டார். ஆனால் கோபி கடைசி வரை எழிலின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்காமல் உனக்கு இந்த வாய்ப்பு வேண்டுமென்றால் உங்க அம்மா வரக்கூடாது என்று தெளிவாக சொல்லிவிட்டார். இது எதுவும் தெரியாத பாக்யா, எழிலின் கனவை நிறைவேற்றும் விதமாக தற்போது சந்தோசமான தருணம் நெருங்கி விட்டது.

நான் கலந்து கொள்ள வேண்டும் என்று பாக்யா ஆசை ஆசையாக வந்தார். ஆனால் அப்படி வந்த பாக்யாவை எழில் தடுத்து நிறுத்தி எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் இதில் கலந்து கொள்ள கூடாது வெளியே போங்க என்று சொல்லிவிட்டார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாக்கியா அப்படியே அதிர்ச்சியாகி அழுது கொண்டே வெளியே போய்விட்டார்.

இதை பார்த்து மனதிற்குளே வக்கிர புத்தியுடன் சிரித்துக் கொண்ட சைக்கோ கோபி, ராதிகாவுடன் பூஜைக்கு அனைத்து வேலைகளையும் செய்ய தயாராகி விட்டார். ஆனால் இங்கே தான் மிகப்பெரிய டுவிஸ்ட் இருக்கிறது. தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தின் டைட்டிலை அறிமுகப்படுத்தும் விதமாக எழில் வைத்த பெயர் என்னவென்றால் பாக்கியலட்சுமி.

அதை ஓபன் பண்ணி காட்டும் பொழுது அங்கு இருப்பவர்கள் அனைவருமே சந்தோஷத்தில் உறைந்து விட்டார்கள். ஆனால் இதை எதிர்பார்க்காத கோபி அப்படியே ஷாக் ஆகிவிட்டார். நான் எப்பொழுதுமே பாக்யா பிள்ளை தான் என்று நிரூபித்துக் காட்டும் வகையில் பாக்யாவின் சிறந்த மகனாக எழில் கடைசி வரை பாக்யாவுக்கு துணையாக நின்று பாசத்தைக் காட்டும் ஒரு பையனாக நிற்கிறார்.

பாக்கியா அழுது கொண்டே வெளியே போனபொழுது தான் தெரிகிறது, மகன் எடுக்கப் போகும் படத்திற்கு தன்னுடைய பெயர்தான் வைத்திருக்கிறார். தன் வாழ்க்கையை பற்றி தான் படமாக எடுக்கப் போகிறார் என்ற சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்து எழில் நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டார். பெருமைப்படுத்தும் பிள்ளைகளை விட பெற்றோர்களை சந்தோஷப்படுத்தும் பிள்ளைகள் இருந்தால் போதும். இதைவிட பாக்யாவுக்கு வேறு என்ன வேண்டும் என்பதற்கு ஏற்ப தரமான சம்பவத்தை எழில் செய்து விட்டார்.

Trending News