Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா திருட்டு வேலை வீதிக்கு வந்துவிட்டது என்று சொல்வதற்கு ஏற்ப இனியாவை கையும் களவுமாக கோபி பிடித்து விட்டார். அதாவது இனியாவுக்கு வந்த மெசேஜை பார்த்த கோபி, இனியாவை காலேஜில் டிராப் பண்ணுவதற்கு தயாராகி விட்டார். அப்படி போகும்பொழுது இனியா பாதிலேயே இறங்கி ரெஸ்டாரண்டுக்குள் போனதால் கோபி பின்னாடியே போயி இனியா என்ன பண்ணுகிறார் என்பதை பார்த்து விடுகிறார்.
அப்படி போகும் பட்சத்தில் அந்த ரெஸ்டாரண்டில் இனியா ஒரு பையனுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்ததை கோபி பார்த்து கோபப்படுகிறார். பிறகு அந்தப் பையன் செல்வி மகன் ஆகாஷ் என்பதால் கோபிக்கு இன்னும் அதிகமாக கோபம் வந்துவிட்டது. உடனே இனியாவை அங்கிருந்து வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார். வரும்பொழுது இனியாவின் போனை வாங்கி அதில் இருக்கும் மெசேஜ் அனைத்தையும் பார்த்து விடுகிறார்.
பிறகு வீட்டிற்கு வரும்போது பாக்கியாவுக்கும் போன் பண்ணி சீக்கிரமாக வீட்டுக்கு வா என்று சொல்லிவிடுகிறார். அத்துடன் இனியவை கூட்டிட்டு போன கோபியிடம் ஈஸ்வரி என்ன ஆச்சு ஏன் எல்லாரும் இப்படி இருக்கிறீங்க என்று கேட்கிறார். ஆனால் கோபி எதுவும் சொல்லாமல் இருக்கும் பட்சத்தில் அங்கே இருந்த செழியன் எழில் எல்லோரும் இனியாவிடம் என்ன என்று கேட்கிறார்கள்.
அடுத்ததாக பாக்கியா வீட்டுக்குள் நுழைந்ததும் இனியாவை பற்றி தெரியாமல் நாம் இருந்து விட்டோம். ஆனால் அவள் என்னென்ன வேலை எல்லாம் பார்க்கிறாள் என்பது இப்பொழுது தான் புரிகிறது என்று சொல்லி இனியாவின் போனில் இருக்கும் மெசேஜ் அனைத்தையும் பாக்கியாவிடம் கோபி காட்டிவிடுகிறார். இதனால் பாக்கியா, இனியா மீது வைத்த நம்பிக்கை அனைத்தும் போய்விட்டதே என்ற சூழ்நிலையில் வாய் அடைத்து போய் நிற்கிறார்.
பிறகு கோபி அங்கு இருப்பவர்கள் அனைவரிடமும் இனியா ஒரு பையனை காதலிக்கிறார். அந்தப் பையனை பார்த்து பேசுவதற்காக தான் ஸ்பெஷல் கிளாஸ் என்று பொய் சொல்லி தினமும் போய்க் கொண்டிருக்கிறாள் என்பதை கோபி சொல்லி விடுகிறார். உடனே ஈஸ்வரியும் உன்னால எப்ப பார்த்தாலும் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இரண்டு ஆம்பள பசங்க இருக்கும் பொழுது கூட இந்த அளவுக்கு சிக்கல்கள் வந்ததே இல்லை.
ஆனால் நீ மாசத்துக்கு ஒரு பிரச்சனையை கொண்டு வந்து கொண்டே இருக்கிறாய், உன்னை எல்லாம் என்ன பண்ணுவது என்று தெரியவில்லை என்று சொல்லி ஈஸ்வரி கோபமாக சண்டை போடுகிறார். அதற்கு கோபி இன்னும் இன்னொரு விஷயத்தை சொன்ன அதுவும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும் என்று சொல்லி இனிய காதலிப்பது நம்ம வீட்டில கூட்டி பெருக்கி தட்டுகளை கழுவும் செல்வி பையன் ஆகாஷை தான் என்று சொல்லிவிடுகிறார்.
இதை கேட்டதும் ஈஸ்வரியும் வாயடைத்து போய்விட்டார் பாக்யாவும் அதிர்ச்சியாகிவிட்டார். அங்கு இருப்பவர்களுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த விஷயங்கள் எதுவும் தெரியாமல் செல்வி அக்கா வழக்கம்போல் பாக்கியா வீட்டிற்கு வரப் போகிறார். வந்ததுமே ஈஸ்வரி இதற்கு தான் இந்த வீட்டிற்குள் நெருங்கி பழகினியா? உண்ட வீட்டுக்கே துரோகம் பண்ணிட்டியே என்று வாய்க்கு வந்தபடி திட்டி வெளியே அனுப்பி விடுகிறார்.
செல்விக்கு என்ன நடந்தது என்று தெரியாத பட்சத்தில் செழியன், உங்க பையனுக்கு என்ன தைரியம் இருந்தால் எங்க தங்கச்சி பின்னாடியே சுற்றுவான் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். உடனே செல்வியும் எதுவும் பேச முடியாமல் பாவமாக வெளியே போய் விடுகிறார். ஆனால் இதில் செல்வி அக்கா தான் பாவம் ஒரு நாள் கூட ஆகாஷை, பாக்யா வீட்டிற்கு கூட்டிட்டு வந்ததும் இல்லை பேச வைத்ததும் இல்லை.
இனிய ஆகாஷ் செய்த தவறுக்கு செல்வி அக்கா என்ன பண்ண முடியும், ஆனா இதுவே செல்வி அக்காவின் பையன் ஆகாஷ் ஒரு கலெக்டராக வந்து நிற்கும் பொழுது இந்த ஈஸ்வரியும் சரி மற்றவர்களும் பல்ல இளிச்சுட்டு போய் நிப்பாங்க. அதற்காகவாவது அந்த ஆகாஷ் நல்லா படித்து கலெக்டர் ஆக வேண்டும். ஆனால் இதற்கு இடையில் பாக்கியம் நிச்சயம் அந்த ஆகாசை சந்தித்து படிப்பில் கவனம் செலுத்து மற்றதெல்லாம் தானாக நடக்கும் என்று வாக்குறுதி கொடுத்து இனியாவிற்கு அந்த ஆகாஷை கட்டி வைத்து விடுவார்.