ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இனியா புத்திமதி சொல்லியதால் கோபிக்கு வந்த நெஞ்சு வலி.. அலட்சியப்படுத்தும் ராதிகா, காப்பாற்றும் பாக்யா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை சந்தித்து தன் மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்கும் விதமாக இனியா மொத்த கஷ்டத்தையும் கொட்டி தீர்த்து விட்டார். இதுவரை யாருக்கும் அடங்காத கோபி, தன் மகள் தனக்கு புத்திமதி சொல்கிறார் என்று தெரிந்ததும் மகளுக்காக திருந்தும் நிலைமைக்கு போய்விட்டார்.

அதாவது இனியா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மையான வார்த்தைகள். தான் செய்த தவறு என்னவென்று புரிந்து கொள்ளும் அளவிற்கு கோபி பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இனிய பேசியதற்கு எந்தவித மறுப்பும் தெரியாமல் தான் செய்த குற்றங்கள் அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டுவிட்டு பாக்யா வீட்டில் விட்டு விடுகிறார்.

திரும்பி வீட்டுக்கு போகாமல் கோபி மன நிம்மதிக்காக காரில் போய்க் கொண்டிருக்கும் பொழுது இனியா சொன்ன வார்த்தைகள் அனைத்தும் எந்த அளவிற்கு காயப்படுத்தி இருக்கும் என நினைத்து கோபி பீல் பண்ணுகிறார். அப்படி நினைத்து பார்க்கும் பொழுது கோபிக்கு நெஞ்சுவலி வந்துவிடுகிறது. அந்த சமயத்தில் கோபி ராதிகாவிற்கு ஃபோன் பண்ணுகிறார்.

ஆனால் ஏற்கனவே கோபி மற்றும் இனியா இருவரும் கடற்கரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது ராதிகா கால் பண்ணி இருந்தார். அப்பொழுது கோபி, ராதிகாவின் போனை எடுக்காமல் கட் பண்ணி விட்டார். அந்த கோபத்தை காட்டும் விதமாக நெஞ்சு வலியில் துடித்துக் கொண்டிருக்கும் கோபி, ராதிகாவுக்கு போன் பண்ணதும் ராதிகா ஃபோனை எடுக்காமல் கட் பண்ணி விடுகிறார்.

உடனே கோபி வேற யாருக்கும் கால் பண்ணாமல் அடுத்த நிமிஷமே பாக்கியாவிற்கு கால் பண்ணுகிறார். பாக்யாவும் கோபி தான் கால் பண்ணுகிறார் என்று தெரிந்ததும் இவர் ஏன் இப்பொழுது கால் பண்ணுகிறார் என்று நினைக்கிறார். ஆனாலும் கோபி ஃபோனை அலட்சியப்படுத்தாமல் பாக்யா எடுத்து பேசுகிறார்.

அப்பொழுது கோபி வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு பாக்கியதான் கோபியை காப்பாற்றி ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போவார். இதுவரை திருந்தாமல் பாக்யாவிற்கு தொடர்ந்து குடச்சல் கொடுத்துக் கொண்டிருந்த கோபி மகள் சொன்னதும் பண்ணது எல்லாமே தவறு என்ற நிலைமைக்கு வந்து விட்டார். அந்த வகையில் இனி பாக்யா விஷயத்தில் தலையிடாதபடி கோபி திருந்தி விடுவார்.

அத்துடன் ஹாஸ்பிடலில் இருக்கும் கோபியை பார்க்க ராதிகா, கமலா மற்றும் ஈஸ்வரி என அனைவரும் வருவார்கள். அப்பொழுது அனைவரது முன்னாடியும் நின்று கோபி, பாக்கியாவுக்கு செய்த கொடுமைக்கு மன்னிப்பு தெரிவித்து இந்த நாடகத்திற்கு சுபம் போட போகிறார்கள்.

Trending News