திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பழனிச்சாமியை தேடி வீட்டிற்கு போகும் கோபியின் குடும்பம்.. திருமணத்துக்கு பொறுப்பேற்கும் பாக்கியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி தொடர் மிஸ் பண்ண முடியாத அளவிற்கு ஒவ்வொரு எபிசோடுகளும் தற்போது ஜாலியாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக கோபி மாறிக்கொண்டே வருகிறார். அவருடைய குடும்பத்தினுடைய அருமை இப்பதான் புரிகிறது. அதாவது சொல்வார்களே வெயிலில் நிற்கும்போது தான் நிழல் ஓட அருமை தெரியும்.

அதே போல தான் கோபி ராதிகாவிடம் போனதுக்கு பிறகு தான் உண்மையான குடும்பம்னா என்ன, மனைவி என்றால் என்னவென்று புரிய ஆரம்பிக்கிறது. சொல்லும்போது இவருக்கு தெரியவில்லை பட்டு தான் திருந்தனும் என்று இவருக்கு இருக்கிறது. அதனால் ஒவ்வொரு நாளும் ராதிகாவிடமிருந்து விலகும் நினைப்பிலே ரொம்ப தூரம் போய்க் கொண்டிருக்கிறார்.

Also read: யார் அந்த ஜீவானந்தம் கண்டுபிடித்த ஜனனி.. சுக்கு நூறான குணசேகரனின் சொத்து கனவு

ஏற்கனவே ராதிகாவிடம் இந்த குடும்பத்துடன் நாம் சேர்ந்து இருந்தால் நம்முடைய நிம்மதி போய்விடும்.  அதனால் தனியாகவே போய்விடலாம் என்று எத்தனையோ முறை சொல்லி இருக்கிறார். இதை கொஞ்சம் கூட கேட்காத ராதிகா பிடிவாதமாக இங்கே தான் இருக்க வேண்டும் என்று இருந்தார். ஆனால் தற்போது கோபியை பார்க்க பார்க்க ராதிகாவிற்கு ஒரு பயம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

அந்த பயத்தின் காரணமாக கோபியிடம் நம்ம வேறு எங்கேயாவது தனியாவே போய் விடலாமா என்று கேட்கிறார். ஆனால் கோபிக்கு இதில் விருப்பமில்லாததால் நீ நல்ல மருமகள் என்று என் அம்மாவிடமும் அப்பாவிடமும் பேர் வாங்கணும். அதனால இங்கே இருக்கலாம் என்று சொல்கிறார். ஆனால் உண்மையான காரணம் கோபியின் மனதிற்குள் ராதிகா விட குடும்பம் தான் முக்கியம் என்று எண்ணம் வர ஆரம்பித்துவிட்டது.

Also read: கோபியை கதற கதற கலாய்த்த ஒட்டுமொத்த குடும்பம்.. அல்டிமேட் நக்கல் நையாண்டி

இதனை அடுத்து பழனிச்சாமி உடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு ஏற்கனவே பாக்யாவை குடும்பத்துடன் வரணும் என்று நேரில் போய் கூப்பிட்டு இருக்கிறார். அதன்படி இவர்களும் குடும்பத்துடன் பழனிச்சாமிக்காக அவருடைய அம்மாவின் பிறந்த நாள் பங்ஷனுக்கு கலந்து கொள்கிறார்கள். அங்கே அனைவரும் கலகலப்பாக என்ஜாய் பண்ணுகிறார்கள்.

அடுத்து பாக்கியா, பழனிச்சாமியின் அம்மாவிடம் உங்களுடைய பையன் திருமணத்திற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். நீங்கள் கூடிய சீக்கிரத்தில் அவரை திருமண கோலத்தில் பார்ப்பீர்கள் என்று வாக்கு கொடுக்கிறார். இது எப்படி எந்த மாதிரி ஆகப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக கோபி பண்ண அதையே பாக்கியா பண்ண மாட்டார். இதற்கு இடையில் கோபி மற்றும் ராதிகாவின் திருவிளையாடல் பாக்யா மற்றும் பழனிச்சாமியின் வாழ்க்கையை எந்த மாதிரி மாற்றப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also read: பாசமழையை பொழியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள்.. இதையும் வீடியோ எடுத்துப் போடும் ஐஸ்வர்யா

Trending News