Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கதை எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதே தெரியாத அளவிற்கு தடுமாறிக் வருகிறது. நல்லா இருந்த குடும்பத்திற்குள் சைக்கோ மாதிரி மாலினி நுழைந்து மொத்த ஆட்டத்தையும் கலச்சி கும்மியடித்து போய்விட்டார். அதாவது ஆரம்பத்தில் செழியன் தான் உண்டு தன் வேலை உண்டு என்று நல்லவராக இருந்தார்.
ஆனால் மாலினி தான் விடாப்பிடியாக செழியினை துரத்தி துரத்தி கால சுத்தின பாம்பாக ஒட்டிக்கொண்டார். இதனால் தடுமாறிப்போன செழியன் கடைசியில் மாலினி விரித்த வலையில் சிக்கிக் கொண்டார். இதை தெரிந்து கொண்ட பாக்கியா எப்படியாவது மகனின் வாழ்க்கையை காப்பாற்றி விட வேண்டும் என்று மாலினியை வரவழைத்து கண்டித்தார்.
ஆனால் மாலினியோ சைக்கோ மாதிரி வீட்டுக்குள் புகுந்து செழியனுக்கும் இவருக்கும் இருந்த உறவு முறையை சொல்லிக் கொண்டு வீடியோக்கள் அனைத்தையும் காட்டிவிடுகிறார். அது மட்டும் இல்லாமல் இவருக்கு கல்யாணமான விஷயம் எனக்கு தெரியாது. இப்போதான் தெரியும் என்னை ஏமாற்றி விட்டார் என்று அப்பட்டமாக வாய்க்கு வந்தபடி உலறுகிறார்.
Also read: ஜீவானந்தத்தை அப்பாவாக ஏற்றுக் கொண்ட குணசேகரனின் வாரிசு.. மொத்த கதையும் வேறு எங்கேயோ திரும்புது
இதனை தொடர்ந்து வீடியோவை பார்த்த ஜெனி வேறு எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அதன் பின் குடும்பத்தில் உள்ளவர்கள் மாலினையே வெளியே அனுப்பி விடுகிறார்கள். அடுத்து செழியன் அவர் பக்கம் இருந்த நியாயத்தை சொல்ல வரும்போது அதை கேட்க தயாராக இல்லாத ஜெனி, செழியன் கன்னத்தில் ஓங்கி அறைந்து நல்ல நாக்க புடுங்குற மாதிரி கேள்வியை கேட்டு வீட்டை விட்டு வெளியே போய் விடுகிறார்.
இதெல்லாம் பார்த்து ஒன்னும் செய்ய முடியாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் அப்படியே ஜம்பித்து போய் நிற்கிறார்கள். இவரை தொடர்ந்து அமிர்தா கணேசன் பிரச்சனையும் வீட்டிற்கு தெரிய வருகிறது. இந்த உண்மையை தெரிந்து கொண்ட எழில் மற்றும் அமிர்தா மேற்கொண்டு என்ன முடிவுகள் எடுப்பது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.
கடைசியில் அமிர்தாவும் முடிவெடுக்க முடியாமல் வீட்டை விட்டு அவருடைய அம்மா வீட்டிற்க்கே தற்காலிகமாக போகப் போகிறார். ஆக மொத்தத்தில் கோபி செஞ்ச பாவம் தான் தற்போது பிள்ளைகளை வச்சு செய்கிறது. இந்த பிரச்சனை எல்லாம் எப்படி பாக்கியா சமாளிக்க போகிறார். மகன்களின் வாழ்க்கையை எப்படி காப்பாற்ற போகிறார் என்பதுதான் மீதமுள்ள கதையாக வரப்போகிறது.
Also read: குணசேகரனை வாய் அடைக்க வைத்த அப்பத்தா.. பொறிவைத்து தூக்கப் போகும் ஜீவானந்தம்