வாரிசு நடிகையின் கல்யாண பேச்சு தான் இப்போது பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இயல்பிலேயே தைரியமான பெண்ணான இவர் அந்த பிரபல நடிகரை தான் திருமணம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த அளவுக்கு இருவரும் பல இடங்களில் ஜோடியாக சுற்றி திரிந்தனர். மேலும் பல வருடங்கள் நண்பர்களாக இருந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நிச்சயதார்த்தம் வரை கூட சென்றிருக்கிறார்கள்.
ஆனால் நடிகர் செய்த பல குளறுபடி நடிகையை அப்செட் ஆக வைத்தது. அதனாலேயே துணிந்து அவர் தன் காதலை தூக்கி எறிந்தார். அதை அடுத்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது திருமணத்திற்கு தயாராகி விட்டார். அந்த விஷயம் கேள்விப்பட்டதும் அவர் பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
முதிர் கன்னி போல் இருந்து வந்த நடிகை இப்போது புளியங்கொம்பாக பிடித்துவிட்டார் என்று கிசு கிசுத்து வருகின்றனர். உண்மையில் நடிகையின் வருங்கால கணவர் அவருடைய குடும்ப நண்பராம். கிட்டத்தட்ட 14 வருட பழக்கமாக இருந்த இவர்களுடைய நட்பு கடந்த மூன்று வருடமாக காதலாக மாறியிருக்கிறது.
பிறகு இரு விட்டாரும் கலந்து பேசி திருமணத்திற்கு சம்மதித்திருக்கின்றனர். மேலும் நடிகை கல்யாணத்திற்கு பிறகும் நடிப்பேன் என சில பல கண்டிஷன்கள் போட்டு பேச்சுவார்த்தை நடத்தி தான் தற்போது நிச்சயதார்த்தத்தை முடித்து இருப்பதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது.