1. Home
  2. சினிமா Buzz

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்.. 2வது பொண்டாட்டியை கழட்டி விட நாள் குறித்த நடிகர்

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்.. 2வது பொண்டாட்டியை கழட்டி விட நாள் குறித்த நடிகர்

அடாவடியாக பேசி அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் நடிகர் இப்போது தன்னுடைய இரண்டாவது பொண்டாட்டியையும் கழட்டி விடப் போவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இளம் பெண்ணை அவர் திருமணம் செய்தது பேசு பொருளாக மாறியது. ஆனாலும் நடிகர் வழக்கம்போல எனக்கு என்ன குறை இருக்கு என்று பேசி அனைவரின் வாயையும் அடைத்தார். இருந்தாலும் இதெல்லாம் எத்தனை நாளைக்கு என்று பலரும் வெளிப்படையாகவே முணுமுணத்தனர். ஆனால் நடிகர் தன் இரண்டாவது மனைவியுடன் ஜாலியாக வாழ்க்கையை நடத்தி வந்தார். அது மட்டுமல்லாமல் கணக்கு வழக்கு பார்க்காமல் அவர் செலவழித்ததை பார்த்த பலரும் சத்தம் இல்லாமல் கிசுகிசுத்து வந்தனர். ஆனால் இப்போது ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பதை நடிகர் நிரூபித்திருக்கிறார். தற்போது இரண்டாவது பொண்டாட்டி போரடித்ததால் நடிகர் அவரையும் கழட்டி விட போவதாக அதிர்ச்சி தகவல் கிளம்பியுள்ளது. அதனால் தான் அந்த முக்கிய நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் சலசலக்கப்பட்டு வருகிறது. இந்த வயதிலும் காதல் மன்னன் போல் அலப்பறை செய்து வரும் நடிகர் அந்த நிகழ்ச்சியிலும் யாரையாவது பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறது கோடம்பாக்க வட்டாரம். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்று பலரும் இந்த விஷயத்தை அதிர்ச்சியோடு பேசி வருகின்றனர்.
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.