1. Home
  2. சினிமா Buzz

இளசான நடிகைகளுக்கு வலை விரிக்கும் 80 வயது தயாரிப்பாளர்.. சினிமா ஆசை காட்டி ஏமாற்றும் அவலம்

இளசான நடிகைகளுக்கு வலை விரிக்கும் 80 வயது தயாரிப்பாளர்.. சினிமா ஆசை காட்டி ஏமாற்றும் அவலம்

மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது என்ற பழமொழி இந்த தயாரிப்பாளருக்கு ரொம்பவும் பொருந்தும். 80 வயதை கடந்த அந்த தயாரிப்பாளர் சில திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். ஆனால் அதற்கே தான் ஒரு பெரிய தயாரிப்பாளர் என்று கூறிக்கொண்டு போகும் இடத்தில் எல்லாம் மைக்கை பிடித்துக் கொண்டு சொற்பொழிவு ஆற்றுவதே இவருக்கு ஒரே வேலையாக இருக்கிறது. இப்படியே தன்னை பிரபலமாக்கி கொண்ட இவருடைய பெயர் தற்போது சோசியல் மீடியாவில் அல்லோலப்பட்டு கொண்டிருக்கிறது. நடிகைகளை பற்றி யார் தவறாக பேசினாலும் கண்டபடி திட்டி தீர்க்கும் இவரும் ஒரு காலத்தில் சில பெண்களிடம் சென்றதாக வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதன் மூலம் தன்னை உத்தமராக காட்டிக் கொண்டிருக்கும் இவர் இப்போதும் சில லீலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது தான் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. குடும்பத்தை பிரிந்து சொகுசு விடுதியில் தங்கி இருக்கும் இவரின் டார்கெட்டே சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடும் இளம்பெண்கள் தானாம். அப்படிப்பட்ட இளசான பெண்களிடம் இவர் பெரிய பெரிய ஆட்களை எல்லாம் எனக்கு தெரியும் நிச்சயம் உன்னை ஹீரோயின் ஆக்கி விடுவேன் என்று கூறியே அட்ஜஸ்ட்மென்ட் கேட்பாராம். தாத்தா வயதில் இருக்கும் அவருடைய இந்த புத்தியை தெரிந்து கொண்ட பல பெண்கள் திரும்பி பார்க்காமல் ஓடி இருக்கிறார்கள். ஆனால் வாய்ப்பு வேண்டுமே என்று சில பெண்கள் அதற்கு இசைந்ததும் உண்டு. அவருடைய இந்த அந்தரங்க லீலைகளை பற்றி தெரிந்த அந்த பத்திரிகையாளர் எங்கே வெளியில் சொல்லி விடுவாரோ என்று பயந்து தான் அந்த தயாரிப்பாளர் போகும் இடமெல்லாம் அவரைப் பற்றி குறை கூறிக் கொண்டிருக்கிறாராம். இப்போது இருவருக்கும் இடையே மோதல் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் அவருடைய அந்தரங்கம் வீதிக்கு வரலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம். அந்த பயத்தில் தான் தயாரிப்பாளர் அந்த பத்திரிக்கையாளரை முந்திக்கொண்டு இப்பொழுது கிடைக்கும் சேனல்களுக்கு எல்லாம் பேட்டிக் கொடுத்து வருவதாக காத்து வாக்கில் ஒரு தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.