1. Home
  2. சினிமா Buzz

அர்த்த ராத்திரியில் நடிகையை தேடி செல்லும் நடிகர்.. காதலை தாண்டி சென்ற அந்தரங்க உறவு

அர்த்த ராத்திரியில் நடிகையை தேடி செல்லும் நடிகர்.. காதலை தாண்டி சென்ற அந்தரங்க உறவு

ஒரு படத்தில் சேர்ந்து நடித்து விட்டாலே ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் நிஜத்திலும் கெமிஸ்ட்ரி பற்றி கொள்கிறது. அப்படித்தான் இளம் நடிகை ஒருவர் தன்னுடன் நடித்த சக நடிகரின் மேல் ஓவர் லவ்வில் இருக்கிறாராம். நடிகரும் சதா நேரமும் காதலியுடன் கடலை போடுவதில் தான் ஆர்வம் காட்டி வருகிறாராம். அறிமுக படத்திலேயே இளசுகளை கவர்ந்த நடிகை இப்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் முதல் படம் போல் பெரிய வெற்றியை அவரால் கொடுக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் காதலனுடன் அவர் அதிக நேரம் செலவிடுவதுதான். எந்நேரமும் காதல் மயக்கத்தில் இருக்கும் இவர் லவ்வருடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறாராம். இவர்தான் இப்படி என்றால் நடிகரும் மகுடிக்கு மயங்கிய பாம்பாக நடிகையை தேடி அர்த்த ராத்திரி கூட அவருடைய வீட்டுக்கு வந்து விடுகிறாராம். இதுதான் இப்போது சத்தம் இல்லாமல் புகைந்து கொண்டிருக்கிறது. இப்படி காதலை தாண்டிய இவர்களுடைய அந்தரங்க உறவு வீட்டுக்குள்ளேயும் புயலை வீசிக்கொண்டிருக்கிறதாம். ஆனாலும் இந்த ஜோடி எதையும் கண்டு கொள்ளாமல் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி அனைத்தும் எல்லை மீறி போவதை பார்த்த நடிகைகளின் வீட்டில் உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி வருகிறார்கள். ஆனாலும் இந்த ஜோடி கல்யாணம் என்ற நினைப்பே இல்லாமல் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் தனிமையான ஒரு இடத்தை தேடி ட்ரிப் சென்றது நடிகரின் வீட்டிலும் கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.