கிளாமர் காட்டியும் கிடைக்காத வாய்ப்பு.. சாதித்தே தீருவேன் என வாய்ப்புக்காக ஏங்கி கிடக்கும் நடிகை
அறிமுகமான முதல் படத்திலேயே ஹோம்லி லுக்கில் வந்து அனைவரையும் கிறங்கடித்தவர் தான் அந்த நடிகை. அழகான சிரிப்பும், குழந்தை முகமுமாக இருந்த அந்த நடிகை குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். அதனாலேயே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்தது. ஆனால் நடிகையின் போதாத காலமோ என்னவோ அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் பேசப்படவில்லை. இதனால் அவர் முக்கிய நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் கூட நடித்தார். அவ்வளவு ஏன் பேயாக கூட நடித்துப் பார்த்தார். ஆனால் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை. இருந்தாலும் சோர்ந்து போய் விடாத நடிகை கொஞ்சம் கொஞ்சமாக கிளாமர் ரூட்டுக்கு மாற ஆரம்பித்தார். ஆனால் அவருக்கான வாய்ப்புகள் தான் கிடைக்கவில்லை. இப்படி அவர் நடிக்க வந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில் கடைசி முயற்சியாக தற்போது அவர் நடித்து வெளிவராமல் இருக்கும் படத்தை தான் முழுவதும் நம்பி இருக்கிறாராம். ஆனாலும் அந்தப் படமும் இரண்டு வருடங்களாக இதோ அதோ என்று இழுத்துக் கொண்டே போகிறது. இதனால் நடிகை மனதளவில் ரொம்பவே சோர்ந்து போய் விட்டாராம். ஆனாலும் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க அவர் அடுத்தடுத்த வாய்ப்புகளை தேடிக் கொண்டுதான் இருக்கிறார். மேலும் அவர் தன் நட்பு வட்டாரத்தில் எல்லாம் அடுத்ததாக வர இருக்கும் படத்தைப் பற்றி ரொம்பவே பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் அவர் தன் சொந்த ஊருக்கு கூட போகாமல் கோலிவுட்டிலேயே தவம் கிடக்கிறாராம். சாதிக்காமல் ஊர் திரும்ப மாட்டேன் என அடம்பிடிக்கும் நாயகியை பார்த்து அவருடைய பெற்றோர்கள் தான் குழப்பத்தில் இருக்கிறார்களாம். இருந்தாலும் நடிகைக்கு சில காலம் டைம் கொடுத்துள்ள அவர்கள் எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தி வருவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.
