1. Home
  2. சினிமா Buzz

மதுப்பழக்கத்தால் மார்க்கெட்டை இழந்த நடிகை.. பாவப்பட்டு வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்

மதுப்பழக்கத்தால் மார்க்கெட்டை இழந்த நடிகை.. பாவப்பட்டு வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்

நடிகை சின்ன வயதிலேயே ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். முதல் படமே நடிகைக்கு மாபெரும் ஹிட்டாக அதில் இடம்பெற்ற ஒரு பாடல் இவரை பட்டி தொட்டியெங்கும் அழைத்து சென்றது. இவருக்கு குடும்ப பாங்கான கதாபாத்திரம் அடுத்தடுத்து வர ஆரம்பித்தது. இவ்வாறு நல்ல திறமையான நடிகையாக இருந்தும் நடிகை குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். இதன் காரணமாக சினிமாவில் தொடர்ந்து கெட்ட பெயர் ஏற்பட்டது. அதுவும் சினிமா பிரபலம் ஒருவரின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு நடிகை மட்டையாகி விட்டார். இந்த விஷயம் பத்திரிக்கையில் வெளியான நிலையில் வாய்ப்பு வருவதாக இருந்த ஒரு சில படங்களும் கைநழுவி போனது. இதனால் நடிகை மிகுந்த மன வருத்தத்தில் இன்னும் முழு நேர குடிக்க அடிமையாகி விட்டார். அதன் பிறகு அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரம் நடிகையை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்க உதவி செய்திருக்கின்றனர். மேலும் தன்னை முதலில் அறிமுகப்படுத்திய இயக்குனரிடம் நடிகை வாய்ப்பு கேட்டு சென்றிருக்கிறார். அவரோ பாவப்பட்டு நடிகைக்கு வாய்ப்பு கொடுக்க சம்மதித்திருக்கிறாராம். ஆனால் இப்போது டாப் நடிகை ஒருவரின் படத்தை இயக்குனர் எடுத்து வருகிறார். ஆகையால் அதன் பிறகு எடுக்க உள்ள படத்தில் இந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளாராம். இந்த படத்தை மட்டும் சரியாக பயன்படுத்திக் கொண்டு நடிகை நடித்தால் கண்டிப்பாக சினிமாவில் விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடிக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.