சாதாரணமாக கணவன், மனைவி இருவருக்குள் பிரச்சனை நடப்பது சர்வ சாதாரணம் தான். ஆனால் கணவன், மனைவி இருவரும் ஒரே துறையில் இருப்பதால் ஒருவரின் வாய்ப்பு மற்றொருவரால் பரிபோனால் பூதாகர பிரச்சனையே வெடிக்கும். அப்படி தான் மனைவியின் டார்ச்சரால் தற்போது கணவர் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதாவது பிரபல நடிகை தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவரின் வாய்ப்பை கணவருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார். இதனால் கணவரும் மனைவியால் தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததே என்று மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் நடிகை இந்த படத்தில் நான் தான் ஹீரோயின் ஆக நடிப்பேன் என்று ஒரு கண்டிஷன் போட்டு இருந்தார்.
ஆனால் தயாரிப்பு நிறுவனம் இதற்கு சம்மதம் தெரிவிக்க வில்லையாம். ஆகையால் இந்த படத்திற்கு வேறு நடிகையை இயக்குனர் தேடி வந்துள்ளார். ஆனால் தன் மனைவி கொடுக்கும் டார்ச்சரால் ஒவ்வொரு ஹீரோயினையும் நிராகரித்து வந்தார். இதனால் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே சென்றுள்ளது.
இதனால் கோபமடைந்த டாப் ஹீரோ மற்றும் தயாரிப்பு நிறுவனம் அந்த இயக்குனரையே படத்தில் இருந்து தூக்கி விட்டார்களாம். இப்படி ஒரு வாய்ப்பு சினிமாவில் கிடைக்காதா என்று தவமாய் தவமிருந்த அவருக்கு வாய்ப்பு கொடுத்ததும் மனைவி தான், இப்போது வாய்ப்பு பறிபோனதும் அவரால் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் டாப் ஹீரோ படம் கையில் உள்ளதால் மற்ற கதையை ரெடி பண்ணாமல் தைரியத்தில் இயக்குனர் இருந்துள்ளார். இப்போது ஹீரோ இவரை டீலில் விட்டதால் அடுத்த பட வாய்ப்பு இவருக்கு கிடைக்குமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. மேலும் இவரின் கேரியருக்கு இது மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.