மாஸ் ஹீரோ ஒருவர் சின்ன வயதில் பண்ணாத அழும்பே இல்லை என்ற அளவுக்கு தான் இருந்துள்ளார். அதாவது மது, சிகரெட் இல்லாமல் ஒரு நாள் கூட இருந்ததில்லையாம். அதேபோல் பெண்கள் விஷயத்திலும் சில்மிஷ வேளையில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மாஸ் ஹீரோவே ஒருமுறை இரவில் மது மற்றும் மாது இல்லை என்றால் தனக்கு தூக்கமே வராது என்று வெளிப்படையாக கூறியிருந்தார். இந்நிலையில் பெரிய இடத்தில் நடிகை ஒருவரும், அவரின் அக்காவும் அந்த வழியாக வந்திருக்கிறார்கள். இப்போது அந்த நடிகை படத்தில் நடிக்கவில்லை.
இதனால் ஹீரோவுக்கு அவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் நடிகையின் அக்காவை வம்பு இழுத்து உள்ளார். அதன்பிறகு நடிகை தான் இந்த குடும்பத்தைப் பற்றி சொன்னவுடன் ஹீரோ அலறி அடித்துக் கொண்டு ஓடி விட்டாராம். அப்போது ஹீரோவும் மிகப் பெரிய அளவில் பிரபலம் இல்லாமல் வளர்ந்து வரும் நடிகராக இருந்து கொண்டிருந்தார்.
அதன்பிறகு சில வருடங்கள் கழித்து அந்த நடிகையுடன் ஹீரோ ஜோடி போட்டு நடித்தார். இவர்களது நட்பு தற்போது வரை நீடித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஹீரோ அப்போது பல கெட்ட பழக்கம் இருந்த நிலையில் இப்போது அதற்கு நேர் எதிராக அப்படியே மாறிவிட்டார்.
மேலும் இதுபோன்று கெட்ட பழக்கத்திற்கு அடிமையாக இருப்பவர்களுக்கு அறிவுரை சொல்லி வருகிறார். இளம் வயதில் ஹீரோ பண்ணாத அளுச்சாட்டியுமே இல்லை. இப்போது அவர் ஒரு நல்ல மனிதராகவும், எல்லோரும் மதிப்பவராகவும் மாறுவதற்கு அவரது மனைவி தான் காரணம்.