1. Home
  2. சினிமா Buzz

சதா நேரமும் சண்டை தான்.. இரண்டாவது பொண்டாட்டியால் புலம்பி தவிக்கும் இயக்குனர்

சதா நேரமும் சண்டை தான்.. இரண்டாவது பொண்டாட்டியால் புலம்பி தவிக்கும் இயக்குனர்

என்னதான் வெளியில் கெத்தா இருந்தாலும் பொண்டாட்டி கிட்ட அடங்கி போய் தான் ஆகணும். அதே மாதிரி புருஷன் பொண்டாட்டி சண்டை இல்லாத வீடே கிடையாது. இதுக்கு கடவுளே கூட விதிவிலக்கு கிடையாது.

அப்படித்தான் தற்போது ஜீனியஸ் இயக்குனர் ஒருவர் மனைவியுடன் சண்டை போட்டு புலம்பும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இவர் பிரபல நடிகையை திருமணம் செய்து கொண்டு பிறகு இருவருக்கும் செட்டாகாமல் விவாகரத்து செய்தார்.

அதைத்தொடர்ந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டு புள்ள குட்டிகளோடு வாழ்ந்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட வெந்து நொந்து போய் ஒரு ட்வீட் போட்டு இருந்தார். அதை பார்த்த பலரும் இந்த கல்யாணமும் விவாகரத்தில் தான் முடிய போகுதா என கேள்வி எழுப்பி வந்தனர்.

அதன் பிறகு இயக்குனரை குடும்பத்தினர் சமாதானம் செய்து இந்த மாதிரி எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அதனால் இயக்குனரும் கொஞ்ச காலம் அமைதி காத்தார். ஆனால் இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தன் பொண்டாட்டி தன்னை சதா நேரமும் திட்டுவதாகவும் இன்சல்ட் செய்வதாகவும் அவர் கூறியிருப்பது மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி என்னதான் இந்த இயக்குனருக்கு பிரச்சனை மீண்டும் விவாகரத்தா என இந்த விவகாரத்தை கோடம்பாக்கத்தில் சத்தமில்லாமல் பேசி வருகின்றனர்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.