சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்கள் பலரும் தங்கள் அழகை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு விதமான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் பிளாஸ்டிக் சர்ஜரி என்பது தற்போது அதிகமாகி வருகிறது. மூக்கு, உதடு போன்ற பாகங்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அழகுப்படுத்திக் கொள்வது தான் தற்போதைய நடிகைகளின் முக்கிய வேலையாக இருக்கிறது.
இது சில நடிகைகளுக்கு தேவையில்லாத பின் விளைவுகளையும் ஏற்படுகிறது. அந்த வகையில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக கொடிகட்டி பறக்கும் அந்த நடிகையும் தன்னுடைய அழகையும், கவர்ச்சியையும் பாதுகாக்க ஊசி மூலம் பல மருந்துகளை எடுத்துக் கொண்டாராம்.
ஆரம்பத்தில் கொஞ்சம் பூசியது போல் இருந்த நடிகை வயது ஏற ஏற தன்னுடைய உடல் எடையை குறைத்துக் கொண்டே வந்தார். அதிலும் சில வருடங்களாக அவர் ஓவராக உடல் இளைத்து பார்ப்பதற்கு கிழவி போன்ற தோற்றத்தில் இருக்கிறார். அவருடைய திரைப்படங்களிலும் இது அப்பட்டமாக தெரிகிறது.
இதை பலரும் கிண்டலடித்து வந்த நிலையில் சமீபத்தில் அவர் தன் காதலரை கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் நடிகை மிகுந்த பூரிப்போடு அவ்வளவு அழகாக இருந்தார். இதற்காக அவர் கேரளாவில் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் ஒரு செய்தி வந்தது.
இந்நிலையில் நடிகையைப் பற்றிய மற்றொரு செய்தி காத்துவாக்கில் பரவி வருகிறது. அதாவது நடிகை தற்போது செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறாராம். ஏனென்றால் தன்னுடைய அழகுக்காக அவர் எடுத்துக் கொண்ட மருந்துகள் தற்போது பக்க விளைவுகளை காட்டுகிறதாம்.
அதனால் அவருக்கு தற்போது குழந்தை பெறும் பாக்கியம் பறிபோய் உள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு தகவல் மீடியாவில் கசிந்தது. இதனால் மனமுடைந்து போன நடிகை தற்போது தன் கணவரிடம் செயற்கை முறையில் குழந்தை பெற்றே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வருகிறாராம். அதனால் அவர் தற்போது தன் கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவை விட்டு ஒதுங்கிவிட இருக்கிறார் என்று கோடம்பாக்கத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.