1. Home
  2. சினிமா Buzz

Gossip: ஹீரோயினை லவ் டார்ச்சர் செய்த நடிகர்.. பட்டப் பகலில் நடந்த கூத்து

Gossip: ஹீரோயினை லவ் டார்ச்சர் செய்த நடிகர்.. பட்டப் பகலில் நடந்த கூத்து

Gossip: இப்போது கண்ணியமான நடிகராக வலம் வரும் அந்த ஹீரோ ஆரம்பகால கட்டத்தில் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருந்திருக்கிறார். அதனாலேயே அவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகளும் இருந்தது.

அதில் ஒன்றுதான் நடிகரின் காதல் லீலை. தன்னுடன் நடித்த ஹீரோயினை உருகி உருகி காதலித்த அந்த நடிகர் தனியாக ஒரு வீடு எடுத்து தங்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார்.

அதோடு விட்டால் கூட பரவாயில்லை தான் நடிக்கும் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டுக்கே காதலியை அழைத்து சென்று விடுவாராம். அங்கு பட்ட பகலில் வெட்ட வெளியில் இருவரும் ரொமான்ஸ் செய்து சுற்றி இருந்தவர்களை சங்கடத்தில் ஆழ்த்தி விடுவார்களாம்.

ஒருமுறை அப்படித்தான் நடிகர் ஹீரோயினை லவ் டார்ச்சர் செய்திருக்கிறார். இதை சுற்றி இருந்த அனைவரும் பார்த்து கூச்சப்பட்டு ஒதுங்கி இருக்கின்றனர். ஆனால் இயக்குனருக்கு அடுத்த ஷாட் எடுத்தே ஆக வேண்டும்.

அதனால் தயங்கி தயங்கி நடிகரை கூப்பிட்டு இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த அந்த ஹீரோ பேக்கப் என்று சொல்லிவிட்டு காதலியை அழைத்துக் கொண்டு பறந்து விட்டாராம்.

இப்படி எல்லா படப்பிடிப்பிலும் இதே கதையாக இருந்திருக்கிறது. இப்படியே போனால் நடிகரின் திரை வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என அவருடைய நலம் விரும்பிகள் எச்சரித்து இருக்கின்றனர்.

அதனால் நடிப்பு பக்கம் கவனம் திருப்பிய நடிகர் சில காலத்தில் தன் காதலியை பிரேக் அப் செய்தார். அதை அடுத்து மூன்றெழுத்து நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் இப்போது தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.