1. Home
  2. சினிமா Buzz

என்னை நிறைய பேர் யூஸ் பண்ணிக்கிட்டாங்க.. வெளிப்படையாக அந்தரங்க விஷயத்தை பேசிய நடிகை

என்னை நிறைய பேர் யூஸ் பண்ணிக்கிட்டாங்க.. வெளிப்படையாக அந்தரங்க விஷயத்தை பேசிய நடிகை

சினிமாவில் கதாநாயகியாக ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் அவருடைய துருதுருவான பேச்சு, ரசிகர்களிடம் எதார்த்தமாக பழகுவது போன்றவற்றால் வெகு சீக்கிரமே அவருக்கு ஆர்மியை நெட்டிசன் சோசியல் மீடியாவில் தொடங்கினர். தற்சமயம் அவர் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கிறார். அப்படியே நடித்தாலும் படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களே அவரை தேடி வருகிறது. இருப்பினும் அதை சவாலாக நடிக்கும் நடிகைக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிகிறது. அதிலும் இப்போது அந்த நடிகை அளித்த பேட்டியில் அந்தரங்க விஷயத்தை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். அது மட்டுமல்ல அந்த நடிகை தனக்கு திருமணம் ஆகாமலேயே குழந்தை இருக்கிறது. அது தன்னுடைய நாய்க்குட்டி தான் என்றும் தெரிவித்து இருந்தார். இந்த அளவிற்கு அந்த நடிகை விரக்தி அடைய காரணம் அவரை நிறைய பேர் பயன்படுத்திக் கொண்டார்களாம். நான் நிறைய ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன், ஆனால் அதெல்லாம் எனக்கு செட்டாகவில்லை. நான் அவர்களிடம் உண்மையாகத்தான் இருந்தேன், அப்படி இருந்தும் நிறைய பேர் என்னை அந்தரங்க விஷயத்திற்காக மட்டுமே யூஸ் பண்ணி இருக்கிறார்கள். அதிலும் பண விஷயத்தில் நிறையவே ஏமாந்திருக்கிறேன். இது எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய சாதாரண விஷயம் தான். ஆனால் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்பது தேவையில்லாத ஒன்று. ஒருத்தரை அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்த 21-வது நூற்றாண்டிலும் இருக்கிறது என நினைக்கும் போது வெட்கமாக இருக்கிறது என்று அந்த நடிகை பளிச்சென்று சொன்னார்.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.