1. Home
  2. சினிமா Buzz

கில்மா சீனில் நடிக்க பிட்டு போட்ட இயக்குனர்.. எடுத்தேன் பாரு ஓட்டம் என எஸ்கேப் ஆன நடிகை

கில்மா சீனில் நடிக்க பிட்டு போட்ட இயக்குனர்.. எடுத்தேன் பாரு ஓட்டம் என எஸ்கேப் ஆன நடிகை

முன்பெல்லாம் கில்மா சீனில் நடிக்கவும், கவர்ச்சி தரிசனம் காட்டவும் சில நடிகைகள் இருப்பார்கள். ஹீரோயின்கள் எல்லை மீறாத கவர்ச்சியில் தான் நடித்து வந்தனர். ஆனால் இப்போது நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. நான் தான் இருக்கல்ல என்ற ரேஞ்சுக்கு ஹீரோயின்களே கவர்ச்சி தரிசனம் காட்டி வருகின்றனர். அதிலும் ரொம்பவும் ஓப்பனாக படம் எடுக்கும் இயக்குனர்களின் வரவு இப்போது அதிகமாகி விட்டது. மேலும் சைக்கோத்தனமாக வெளிவரும் படங்களுக்கு வரவேற்பும் கிடைப்பது தான் வேதனையின் உச்சகட்டம். அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்த மிருகப் படத்தில் ஹீரோவின் கதாபாத்திரம் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்தது. இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் படம் நினைத்ததற்கு மேலேயே கல்லா கட்டியது. அதனாலேயே இப்போது பல தயாரிப்பாளர்களும் அந்த மாதிரி படத்தை எடுப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதில் பிரபல இயக்குனர் ஒருவர் ஹோம்லி நடிகையை தன் படத்தில் நடிக்க கேட்டிருக்கிறார். அதை தொடர்ந்து ஆடிஷனுக்கு வருமாறு அழைப்பும் விடுத்திருக்கிறார். அந்த அழைப்பை ஏற்று சென்ற நடிகைக்கு இயக்குனர் கொடுத்த அதிர்ச்சி தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது தன்னுடைய படத்தில் ஹீரோயினுக்கு தான் அதிக முக்கியத்துவம். நீங்கதான் இதுக்கு கரெக்டா இருப்பீங்க. அப்படி இப்படி என பிட்டு போட்ட இயக்குனர் திடீரென மிருகப் படத்தில் வரும் கில்மா சீன் ஒன்றை போட்டு காட்டி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியான நடிகை யோசித்து போன் செய்கிறேன் என்று கூறி பின்னங்கால் பிடரியில் பட ஓடி வந்து விட்டாராம். அதன் பிறகு இயக்குனர் போனில் அழைத்த போது கூட எடுக்காமல் அவர் நம்பரையே பிளாக் பண்ணி விட்டதாக தகவல்கள் புகைந்து கொண்டிருக்கிறது.
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.