1. Home
  2. சினிமா Buzz

வயசு கோளாறில் போட்ட ஓவர் ஆட்டம்.. குட்டு வெளிப்பட்டதால் தனிமரமாய் இருக்கும் நடிகை

வயசு கோளாறில் போட்ட ஓவர் ஆட்டம்.. குட்டு வெளிப்பட்டதால் தனிமரமாய் இருக்கும் நடிகை

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் இந்த நடிகை இப்போது வெள்ளித்திரையில் மாஸ் காட்டிக்கொண்டிருக்கிறார். எந்த அளவுக்கு புகழுடன் இருக்கிறாரோ அதே அளவுக்கு இவர் மீது சர்ச்சைகளும் இருக்கிறது. ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்திருந்த இவர் பல காலம் சிங்கிளாகவே சுற்றி வந்தார். அதை அடுத்து இவர் திடீரென திருமண வாழ்க்கைக்குள்ளும் நுழைந்தார். ஆனால் விரைவிலேயே விவாகரத்து பெற்று மீண்டும் சிங்கிளாக பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அம்மணி வயசு கோளாறில் போட்ட ஓவர் ஆட்டம் தான். பாராபட்சம் பார்க்காமல் ஆண் நண்பர்களோடு நைட் பார்ட்டி, பப் என இவர் சுற்றி திரிந்தது கணவருக்கு தெரியும் என்றாலும் இந்த நடிகையை ஆசை ஆசையாகவே காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திடீரென சோசியல் மீடியாவில் நடிகையின் திரைமறைவு லீலைகள் அம்பலமானது குடும்பத்திற்குள் பூகம்பமாக வெடித்து இருக்கிறது. பாரம்பரியமான குடும்பத்தில் வாக்கப்பட்ட நடிகையின் இந்த முகம் அவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கருத்து வேறுபாடில் நீங்களும் வேண்டாம் உங்கள் குடும்பமும் வேண்டாம் என்று உதறிவிட்டு பிறந்த வீட்டுக்கே வந்து விட்டார் நடிகை. இப்போது அவர் மறு திருமணம் என்பதை பற்றி யோசிக்காமல் தனிமரமாய் வாழ்ந்து வருகிறார்.
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.