பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் குடும்ப பாங்காக இருக்கும் நடிகை முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். துருதுருவென இருக்கும் அவருடைய நடிப்பும், அழகும் ரசிகர்களை ரொம்பவே செய்தது. அதை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி இடத்தை நோக்கி சென்றார்.
ஆனால் திடீரென்று என்ன ஆனதோ நடிகை படங்களில் நடிப்பது குறைய ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. ரசிகர்களும் புதுப்புது நடிகைகளின் வரவால் அவரை கிட்டத்தட்ட மறந்தே போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அதன் பிறகு நடிகை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்றும் மதுவுக்கு அடிமையாகி விட்டாய் என்றும் பல செய்திகள் வெளியானது. ஆனால் உண்மையில் அவர் வாய்ப்பு இல்லாமல் முடங்கிப் போனதற்கு காரணம் அந்த மாஸ் ஹீரோ தான். அவருடைய படத்தில் நடிப்பதற்காக நடிகையை கமிட் செய்து இருக்கின்றனர்.
ஆனால் வழக்கம் போல இந்த ஹோம்லி நடிகையையும் அவர் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டிருக்கிறார். ஆனால் வாய்ப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்று அவர் முரண்டு பிடித்து இருக்கிறார். இதனால் நடிகர் கோபமடைந்து வேறு ஒரு நடிகையை அந்த படத்தில் நடிக்க புக் செய்து விட்டார்.
ஆனாலும் இந்த அவமானத்தை தாங்க முடியாத அவர் அந்த நடிகையின் மார்க்கெட்டையே காலி செய்து இருக்கிறார். மேலும் தொடர்ச்சியாக அவருக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் கிடைக்க முடியாத படி செய்திருக்கிறார். அதைத்தொடர்ந்து பல வருடம் போராடிய அந்த நடிகை இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க தயாராக இருக்கிறார்.