Gossip : சினிமாவில் நடிகையாக பயணிப்பது மிகவும் கொடியது என்பதை நிரூபிக்கும் வகையில் பல ஹீரோயின்கள் தங்களுக்கு நடந்த அநீதிகளை கூறி வருகிறார்கள். இதற்காக கமிட்டி அமைக்கப்பட்ட நிலையில் பல நடிகைகள் மௌனம் கலைந்து வருகிறார்கள்.
பக்கத்து மாநிலத்தில் இருந்து வந்த நடிகை தமிழில் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இதுதான் தன்னுடைய வாழ்க்கை என்று நினைத்தால் இயக்குனர் நம்பி படத்தில் நடிக்க ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த இயக்குனர் அதன் பிறகு கவர்ச்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிக்க கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதற்கு நடிகை மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.
நடிகையை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்த இயக்குனர்
தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதை பார்த்தால் என்னை தவறாக நினைப்பார்கள். ஆகையால் இந்த காட்சிகளில் நடிக்க முடியாது என மறுத்த நடிகையை இயக்குனர் சமாதானப்படுத்துகிறார். இப்படி நடித்தால் தான் படம் ஹிட் ஆகும் என்று கூறியுள்ளார்.
வேறு வழியில்லாமல் மனசை கல்லாக்கி கொண்டு நடிகையும் அந்த காட்சிகளில் நடித்திருக்கிறார். ஆனால் ரிகர்சல் செய்து காட்டுகிறேன் என்று நடிகை இடம் அத்துமீறி நடந்து கொண்டிருக்கிறார் இயக்குனர்.
மேலும் படத்தை பார்க்கும் போது அதுபோன்ற கிளாமர் காட்சிகள் எதுவுமே இடம்பெறவில்லையாம். இது குறித்து இயக்குனரிடம் கேட்க போது சென்சருக்கு அனுப்பப்பட்ட நிலையில் அது கட் செய்யப்பட்டுள்ளது என்று சாக்கு போக்கு சொல்லி உள்ளார்.
இயக்குனர் தனது ஆசையை தீர்த்துக் கொள்ள தான் இவ்வாறு செய்தார் என்பது அப்போது தான் நடிகைக்கு புரிந்துள்ளது. ஆனாலும் எதுவும் செய்ய முடியாமல் மௌனமாகத்தான் இருந்துள்ளார் நடிகை.