1. Home
  2. சினிமா Buzz

மேலிடத்தில் இருந்து பறந்த போன் கால்.. வாலை சுருட்டி பம்மிய இயக்குனர்

மேலிடத்தில் இருந்து பறந்த போன் கால்.. வாலை சுருட்டி பம்மிய இயக்குனர்

சமீபகாலமாக அந்த இயக்குனரின் பெயர் பல சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் வாரிசு நடிகையுடன் அவர் எடுத்திருந்த புது அவதாரம் தான்.

அதைப் பார்த்து கோடம்பாக்கமே திறந்த வாய் மூடாமல் இருந்ததெல்லாம் தனி கதை. ரகட் பாய் என நாம் நினைத்தால் இவர் ரொமான்ஸில் புகுந்து விளையாடுகிறாரே என எண்ணும் அளவுக்கு இருந்தது இயக்குனரின் அவதாரம்.

ஆனால் அதுவே அவருக்கு பின்னடைவாக அமைந்தது. இதுவரை சேர்த்த பெயர் எல்லாம் கெட்டுப் போகும் அளவுக்கு நடிகையுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தது.

அதற்கேற்றார் போல் இருவரும் ஜோடியாக இருக்கும் போட்டோக்களும் இணையத்தில் வைரல் ஆனது. இதையெல்லாம் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறது இயக்குனரை கமிட் செய்த தயாரிப்பு நிறுவனம்.

உச்ச நடிகருடன் இணைய உள்ள ப்ராஜெக்ட் தான் இப்போது பரபரப்பு செய்தியாக இருக்கிறது. இந்த நேரத்தில் இயக்குனர் இப்படி பெயரை கெடுத்துக் கொள்கிறாரே என தயாரிப்பு தரப்பு பதறி இருக்கின்றனர்.

அதையடுத்து உடனே இயக்குனருக்கு போன் கால் பறந்து இருக்கிறது. அதில் மேலிடம் செம டோஸ் விட்டிருக்கிறார்கள். அதனால் தான் இயக்குனர் தற்போது வாலை சுருட்டி கொண்டு பம்மி இருக்கிறாராம்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.