குடும்ப குத்து விளக்குனு நினைச்ச அந்தரங்கத்திற்கு அடி போட்ட நடிகை.. 2ம் தாரமாக வாக்கப்பட வலையில் விழுந்த நடிகர்

பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து திறமையான நடிகை என்று பெயர் எடுத்தவர் தான் அந்த நடிகை. பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் குடும்ப பங்காக இருக்கும் அவர் சமீப காலமாக ஓவர் அட்ராசிட்டி செய்து வருகிறாராம். எப்போதுமே தன்னடக்கத்துடன் இருக்கும் அந்த நடிகைக்கு திடீரென்று என்ன ஆச்சு என்று புரியாமல் பலரும் குழம்பி போய் இருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் இதுவரை கண்ணை உறுத்தாத வகையில் உடை அணிந்து நடித்த அந்த நடிகை தற்போது படு கிளாமருக்கு மாறி இருக்கிறார். குட்டி உடையில் கவர்ச்சியாக அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து மூச்சடைத்து போன ரசிகர்களுக்கு அவர் பற்றி அடுத்தடுத்து வெளிவரும் செய்திகளும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதாவது நடிகை சமீப காலமாக திருமணமான இளம் நடிகர் ஒருவருடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாராம். அவருடன் பார்ட்டி, டேட்டிங் என்று என்ஜாய் செய்து வரும் நடிகை விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டு இருக்கிறார். இந்த விஷயம் தற்போது நடிகரின் வீட்டில் பெரும் புயலாக மாறி இருக்கிறது.

ஆனாலும் நடிகை இரண்டாம் தாரமாக தான் வாக்கப்படுவேன் என்று அந்த நடிகரை வெறியோடு சுற்றிக் கொண்டிருக்கிறாராம். இதனால் திரையுலகில் நடிகைக்கு இருந்த கொஞ்ச நல்ல பெயரும் இப்போது டேமேஜ் ஆகி இருக்கிறது. ஏனென்றால் ஏற்கனவே நடிகையின் மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கிறது.

அதாவது தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களை அவர் மதிப்பதே கிடையாதாம். அதேபோன்று தன்னுடைய அசிஸ்டண்டுகளையும் அவர் மரியாதை குறைவாக நடத்தி வருகிறார். அது மட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்தில் கூட டெக்னீசியன்களிடம் அவர் கடுமையாக நடந்து கொண்டது பரபரப்பை கிளப்பியது.

இதனால் நடிகையை தங்கள் படங்களில் புக் செய்ய பல தயாரிப்பாளர்கள் தயங்கி வருகின்றனர். இந்நிலையில் அந்த நடிகை ஏற்கனவே கெட்டுப் போயிருந்த தன்னுடைய பெயரை மேலும் கெடுத்துக் கொள்வது போல் நடந்து கொள்வது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியாக்கி இருக்கிறது.