1. Home
  2. சினிமா Buzz

தயாரிப்பாளர் காசில் மங்களம் பாடிய ஜீவ நடிகர்.. மொத்தமாக ஒதுக்கிவிட்ட பரிதாபம்

தயாரிப்பாளர் காசில் மங்களம் பாடிய ஜீவ நடிகர்.. மொத்தமாக ஒதுக்கிவிட்ட பரிதாபம்

Gossip: பிளேபாய் ரகட் பாய் என வெரைட்டியான கேரக்டர்களின் மூலம் பிரபலமானவர் தான் ஜீவ நடிகர். அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த இவர் இப்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.

அது நான் இல்லங்க என நடித்து புகழ்பெற்றவருக்கு அடுத்தடுத்த படங்களும் வெற்றியை கொடுத்தது. அதன் விளைவு தலையில் கொம்பு முளைக்காத குறையாக அட்டகாசம் செய்திருக்கிறார்.

மொத்தமாக ஒதுக்கிவிட்ட பரிதாபம்

ஒரு படத்தில் இவர் நடிக்க கமிட்டான போது சில லட்சங்கள் தான் சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் இரண்டு படம் ஹிட் ஆனதும் கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.

அக்ரிமென்ட் படி அது முடியாது என்று தயாரிப்பாளர் சொல்லியும் கேட்காமல் அலப்பறை கொடுத்திருக்கிறார். அது மட்டுமா ஷூட்டிங் ஸ்பாட்டில் கேரவனில் ஆரம்பித்து எல்லாத்துக்கும் பிரச்சனை செய்திருக்கிறார்.

தயாரிப்பாளரிடம் ஓவர் அதிகாரம் காட்டியதில் அவர் தான் நொந்து போயிருக்கிறார். எப்படியோ படத்தை எடுத்து வெளியிட்டால் எதிர்பார்த்த அளவு லாபம் வரவில்லை.

அதன் பிறகு நடிகர் சில படங்களில் நடித்தார். எதுவும் ஒர்க்அவுட் ஆகாத நிலையில் இப்போது அவரை மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டது திரையுலகம்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.