சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பின் மூலம் அனைவரையும் வியக்க வைத்தவர் தான் அந்த நடிகை. அழகும், திறமையும் கொண்ட அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்தார். இதனால் அவருடைய மார்க்கெட்டும் உயர்ந்தது.
இப்படி முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும்போதே சினிமா பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பை விட்டு ஒதுங்கிய அந்த நடிகை குடும்பத்தை கவனித்து கொண்டு நல்ல மனைவியாக வாழ்ந்து வந்தார்.
நன்றாக சென்று கொண்டிருந்த அவருடைய திருமண வாழ்வில் திடீரென பிரச்சனைகள் ஏற்பட்டது. தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணியில் இருந்த அவருடைய கணவருக்கு திடீரென வாய்ப்புகள் வருவது குறைய ஆரம்பித்தது. அதனால் மன உளைச்சலில் இருந்த அவருடைய கணவருக்கு எதிர்பாராத நேரத்தில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அதில் தான் ஒரு டிவிஸ்ட் ஏற்பட்டது. அதாவது வாய்ப்பு கொடுத்த அந்த தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று அவர் தன் மனைவியிடம் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன நடிகை இப்படி ஒரு நரகமே வேண்டாம் என்று தான் சினிமாவை விட்டு ஒதுங்கி உங்களை திருமணம் செய்து கொண்டேன்.
ஆனால் மீண்டும் என்னை அந்த புதைகுழியில் தள்ள பார்க்கிறீர்கள் என்று கூறி பயங்கரமாக சண்டை போட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இனிமேல் இப்படி ஒரு கணவன் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து விவாகரத்தும் செய்து கொண்டார். தற்போது அந்த நடிகை ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டு தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.