1. Home
  2. சினிமா Buzz

30 வயதில் பாடகிக்கு நடந்த கொடூரம்.. பாத்ரூமில் மரணம் அடைந்த சோகம்

30 வயதில் பாடகிக்கு நடந்த கொடூரம்.. பாத்ரூமில் மரணம் அடைந்த சோகம்

ஏற்கனவே பிரபல நடிகை ஒருவர் பாத் டப்பில் மூழ்கி உயிரிழந்ததை தற்போது வரை ரசிகர்கள் நம்ப முடியாமல் உள்ளனர். மேலும் இந்த உயிரிழப்பிற்கான காரணம் என்ன என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதற்குள்ளாகவே 30 வயது பாடகி பாத்ரூமில் மர்ம மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னுடைய 17 வயதில் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இதன் மூலம் வெள்ளி திரையில் பாடகி ஆகும் வாய்ப்பு கிடைத்தது.

இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு பெரிய நடிகர்களின் படங்களின் பாடல் பாடி வந்தார். இப்போதுதான் அவர் தான் நினைத்தபடி நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் பாடகி பார்ட்டிக்கு சென்றிருந்தார்.

அப்போது பாத்ரூமுக்கு சென்ற அவர் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகப்பட்டு போய் பார்த்துள்ளனர். மயக்க நிலையில் கடந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பாடகி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் எதர்ச்சியாக இந்த இறப்பு நடந்ததா அல்லது தற்கொலையா என்று போலீசார் விசாரிக்க தொடங்கியுள்ளனர். இளம் வயதில் பாடகியின் இந்த திடீர் மறைவு சினிமா துறையில் வேதனையையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.