1. Home
  2. சினிமா Buzz

வேர்ல்டு நடிகர் மீது செம கோவம்.. நான் சிவனேன்னு தான இருந்தேன், புலம்பும் ஹீரோ

வேர்ல்டு நடிகர் மீது செம கோவம்.. நான் சிவனேன்னு தான இருந்தேன், புலம்பும் ஹீரோ

Gossip: அந்த ஹீரோ ஆரம்பத்தில் பரபரப்பாக நடித்து வந்தாலும் இடையில் தன்னுடைய சேட்டையால் இமேஜை கெடுத்துக் கொண்டார். அதன் பிறகு ஒரு வழியாக கஷ்டப்பட்டு கம்பேக் கொடுத்தார்.

அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அடுத்தடுத்து படங்களில் கமிட்டானார் ஆனால் இடையில் சில வருடங்கள் பெரிய இடைவெளி வந்துவிட்டது.

எல்லாத்துக்கும் அந்த வேர்ல்ட் ஹீரோ தான் காரணம். அவருடைய படத்தில் நடிக்க காத்திருந்து கடைசியில் ஆப்பு வந்தது தான் மிச்சம். அதை அடுத்து அவருடன் இந்த ஹீரோ இணைந்து நடித்தார்.

வேர்ல்டு நடிகர் மீது செம கோவம்

படம் வெளி வருவதற்கு முன்பு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் வந்த பிறகு நடிகரின் கனவு கோட்டை அப்படியே தகர்ந்து விட்டது.

இதனால் கடுப்பான ஹீரோ வெளிநாட்டுக்கு பறந்து விட்டார். அங்கு சொல்ல முடியாத சோகத்தில் இருக்கும் இவர் நான் பாட்டுக்கு சிவனே என்று தான் இருந்தேன்.

தேவை இல்லாமல் இந்த படத்துல நடிக்க வச்சு இமேஜை காலி செஞ்சுட்டாங்க என நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம். தற்போது அவரது கை நிறைய படங்கள் இருக்கிறது.

அதில் அதிக கவனம் செலுத்தி மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் இப்போது முடிவு செய்து இருக்கிறார். அதற்கான வேலையிலும் நடிகர் இறங்கி விட்டார்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.