திரிஷா செல்ஃபி புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை.. அவதூறு பரப்பும் IT விங்

த்ரிஷாவை வைத்து விஜய் மீது பரப்பப்படும் அவதூறு. சமூக வலைத்தளங்களில் ஐடி விங் செய்யும் மட்டமான வேலை.
தவெக கட்சி மீது பல அவதூறுகள் பரப்பி வரும் சமூக வலைதள IT விங் சற்று ஒரு படி மேலே சென்றுள்ளது. அதாவது த்ரிஷா எதார்த்தமாக ஹோட்டலில் இருந்து செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.
அது வைரலானது அந்த புகைப்படத்தை மார்பிங் செய்து உள்ளே தவெக கொடியை வைத்து தற்போது வைரலாக்கி வருகின்றனர். முடிந்தவரை விஜய் பெயரை கெடுத்து விட வேண்டும் என்பதற்காகவே இதை செய்து வருகின்றனர்.
தளபதி விஜய்-யின் மீதோ கட்சியின் மீதோ இது போன்ற அவதூறுகள் பரப்பினாலும் அது எந்த விதத்திலும் அவருக்கு பாசிட்டிவ் ஆக தான் முடிகிறது. கரூர் சம்பவத்திற்கு பின் விஜயை அடியோடு ஒளித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டி திரிகின்றனர்.
அதற்காகவே பல விதமான அவதூறுகள் பரப்பப்பட்டு விஜய்-யை 30 நாட்கள் வீட்டிலேயே முடக்கி வைத்திருந்தனர். அவர் அதையெல்லாம் தகர்த்துவிட்டு கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து மகாபலிபுரத்தில் வைத்து சந்தித்தார்.
அதற்கும் எதிர்மறையான வீடியோக்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தினர். எதற்கும் அஞ்சாமல் இறந்து போன 41 குடும்பத்தையும் கிட்டத்தட்ட தத்தெடுத்து விட்டார் என்றே கூறலாம்.
தவெக தலைவர் விஜயை சுற்றி இருப்பவர்கள் விஜய்க்கு எந்த விதத்திலும் நல்லது நடக்க விடாமல் தடுத்து வருகின்றனர், எந்த முகமும் பரிசயமான முகம் இல்லை, கட்சியை கலைப்பது உறுதி, Bussy anand தலைமுறைவு, செய்தியாளர்களை சந்திக்காதது இதுபோன்று பல அவதூறுகளை அவர் மீது பரப்பி வருகின்றனர்.
ஆனால் தளபதி விஜயோ இதை பத்தோடு பதினொன்றாக இந்த புகைப்படத்தையும் பார்த்து ரசித்து விட்டு கடந்து சென்று விடுவார் என்பது தான் உண்மை. எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் அதை உற்று நோக்கி ஆராய்ந்து பார்க்க வேண்டும் புகைப்படத்தில் தவெக கொடியுடன் வெளியிடுவது தனக்குத் தானே குழி வெட்டிக் கொள்வது என்பது அவர்களுக்கே தெரியும்.
ஆனால் இது போன்ற போட்டோ எடிட் செய்து சில தற்குறிகள் விஜயின் பெயரை கெடுத்து வருகின்றனர். ஒரு போட்டோ போட்டது குத்தமா என்று த்ரிஷா தற்போது தலையில் அடித்துக் கொண்டு புலம்பி வருகிறாராம்.

