ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சந்தர்பால் கண்களுக்கு கீழ் மின்னும் ஸ்டிக்கர்களின் ரகசியம்! பல ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த உண்மை.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் சிவ்னரைன் சந்தர்பால். இவர் தமது அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். தனக்கே உண்டான தனித்துவமான ஸ்டைலினால் ரசிகர்களைக் கவர்ந்தவர். ஒருநாள் போட்டியில் மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளிலும் நிலைத்து நின்று ஆடக்கூடியவர். இந்தியாவின் ராகுல் டிராவிட் எப்படியோ அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணியில் சந்தர்பால்.

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட காமராஜ் மற்றும் உமா தம்பதியருக்கு மகனாக பிறந்தவர். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 20 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்தவர். ஜாம்பவான் பிரையன் லாரா விளையாடிய காலத்தில் இவர் விளையாடியதால், அவருக்கு நிகரான பெயரை இவர் பெறவில்ல.

விவி ரிச்சர்ட்ஸ், பிரைன் லாரா போன்றவர்களின் ஆதிக்கம் குறையும் காலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு கிடைத்த ஒரு விடிவெள்ளி சந்தர்பால். தனித்துவமான ஆட்டத் திறமை கொண்டவர். மெல்ல மெல்ல எதிரணியின் கையிலுள்ள போட்டியை தன் பக்கம் திருப்பும் வித்தை தெரிந்தவர் சிவ்னரைன் சந்தர்பால்.

Chander-Cinemapettai.jpg
Chander-Cinemapettai.jpg

பொதுவாக வீரர்கள் விளையாடும் பொழுது வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சன் ஸ்கிரீன் பேஸ்ட்களை முகத்தில் பூசி இருப்பார்கள் ஆனால் சந்தர்பால் எப்பொழுதும் களத்தில் விளையாடும்போது இரு கண்களுக்கு கீழ் ஸ்டிக்கர்களை ஒட்டி இருப்பார். அவர் என்ன ஒட்டியிருக்கிறார் என்ற கேள்வியை பலரும் கேட்டுள்ளனர். சிலர் அது அவரது நம்பிக்கை என்றெல்லாம் கூறியுள்ளனர்.

தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது பொதுவாக மேற்கிந்தியத் தீவுகள் போன்ற நாடுகளில் வெப்பம் அதிகமாக இருக்கும். அந்த சமயத்தில் களத்தில் நின்று ஆடும் போது சூரிய ஒளி நேராக கண்களில் தாக்கினால் அது பார்வையை சிறிது மங்கலாக்கும். இதனால் ஆட்டத்திலிருந்து கவனம்
சிதறாமல் இருக்க இந்த ஸ்டிக்கர்களை அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.

Shivnarine-Cinemapettai.jpg
Shivnarine-Cinemapettai.jpg

கண்களுக்குக் கீழ் ஸ்டிக்கர் ஒட்ட படுவதால் மங்கலான பார்வை இல்லாது சிறப்பாக செயல்பட முடியும். முக்கியமாக கண்களில் வெள்ளை விழிகளில் சூரிய ஒளி படாமல் இந்த ஸ்டிக்கர்கள் பாதுகாக்கின்றன. அதனால் வெயிலில் இருந்து கண்களை பாதுகாத்துக் கொள்ளவும், முழுமையான கவனத்தைப் பெறவும் தான் சந்தர்பால் ஸ்டிக்கர்களை ஒட்டி விளையாடி வந்துள்ளார். இந்த உண்மை பல வருடங்களுக்குப் பிறகு தற்போது வெளிவந்துள்ளது.

Trending News