புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பணத்தை அள்ளிக் கொடுத்த கவுண்டமணி, செந்தில்.. அதுவும் யாருக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் காமெடி மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்களது கூட்டணியில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.

அதிலும் குறிப்பாக இவர்கள் கூட்டணியில் 1989 ஆம் ஆண்டு வெளியான கரகாட்டம் படத்தில் இடம்பெற்ற “வாழைப்பழ காமெடிக்கு இன்னும் போட்டி போடுகிறார்கள். அந்த காமெடிலாம் வேற ரகம்.

1980 மற்றும் 1990 காலகட்டம் சினிமாவில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆட்சி காலம் என்று சொல்லலாம். அன்றைய காலகட்டத்தில் வெளியான அனைத்து படங்களிலுமே கவுண்டமணி மற்றும் செந்தில் இல்லாமல் இருக்க மாட்டார்கள். இவர்கள் நடிக்கும் படத்தில் யாராவது ஒருவருக்கு அடிபட்டு விட்டால் அதனை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

goundamani-senthil
goundamani-senthil

அன்றைய நாட்களில் பெரிய காமெடி காட்சியில் நடிப்பதாக இருந்தாலுமே நடிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவார்கலாம் அந்த அளவிற்கு மனிதாபிமானம் உள்ள மனிதர்களாக இருந்துள்ளனர் கவுண்டமணி மற்றும் செந்தில்.

அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு தளத்தில் யாராவது ஒருவருக்கு கஷ்டம் என்றால் கொஞ்சம் கூட யோசிக்காமல் 500 ரூபாய் நோட்டை அள்ளி கொடுத்து விடுவார்களாம். அன்றைய காலகட்டத்தில் 500 ரூபாய் நோட் புதிதாக வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இருவரும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்துள்ளனர். கவுண்டமணி வாய்மை என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் நடித்தார். அதே போல் செந்தில் பிஸ்தா எனும் படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இவர்கள் இருவரும் இன்னும் எந்த படத்திலும் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை.

Trending News