தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு அதில் வெற்றி நடைபோட்ட காமெடி நடிகர்களில் கவுண்டமணி மிக முக்கியமானவர். இவருடைய நக்கல் நையாண்டி இன்னுமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
ஒரு காலகட்டம் வரை தொடர்ந்து காமெடி காட்சிகளில் நடித்து வந்த கவுண்டமணி ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை.
கவுண்டமணி நிறைய படங்களில் செந்திலுடன் கூட்டணி அமைத்து பல வெற்றி காமெடி காட்சிகளை கொடுத்துள்ளார். மேலும் சினிமாவில் வெற்றிகரமான கூட்டணியாகவும் வலம் வந்தனர். கவுண்டமணி செந்தில் இல்லாமல் தனியாகவும் பல படங்களை தாங்கி வென்றுள்ளார்.
கவுண்டமணியின் காமெடி காட்சிகளுக்காகவே ஓடிய படங்களும் உண்டு. சமீபகாலமாக காமெடி நடிகர்களுக்காக படம் பார்க்கும் ஆசையே விட்டுப்போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு காமெடி காட்சிகள் மிகவும் மோசமாக வந்து கொண்டிருக்கின்றன.
சமீபத்தில்தான் கவுண்டமணி தன்னுடைய 82வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதில் தொப்பி, கூலிங் கிளாஸ் என செம ஸ்டைலாக இருக்கிறார் கவுண்டமணி. கவுண்டமணி விரைவில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
