சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

விருந்துக்கு வந்த இடத்துல சிவாஜியை கலாய்த்த கவுண்டமணி.. நடிகர் திலகத்தையே யோசிக்க வைத்த நக்கல் மன்னன்

தேவர் மகன் படம் வெற்றி அடைந்ததை ஒட்டி சிவாஜி தன் நெருங்கிய வட்டாரத்திற்கு விருந்து கொடுத்து மகிழ்வித்தார். அந்த விருந்துக்கு அந்த படத்தில் நடித்தவர்கள் மற்றும் சிவாஜியின் நெருங்கிய நண்பர்கள் அனைவரையும் அழைத்து இருந்தார்.

தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. அப்பொழுது தேவர்மகன் படத்தை அனைவருக்கும் திரையில் போட்டு காட்டினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். படத்தை பார்த்த அனைவரும் சூப்பராக இருக்கிறது என்று பாராட்டி விட்டு சென்றனர். ஆனால் கவுண்டமணி மட்டும் ஏதும் சொல்லாமல் போய்விட்டார்.

கவுண்டமணி எதுவும் சொல்லவில்லையே என்று சிவாஜி மனதிற்குள் ஒரு உறுத்தலாக இருந்துள்ளது.அந்த கவுண்டரை அழைத்து வாருங்கள் என கட்டளையிட்டார். சில நாட்களுக்கு பிறகு கவுண்டமணி, சிவாஜி கணேசன் வீட்டிற்கு வந்துள்ளார்.

Also Read:750 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றியை பார்த்த சிவாஜி.. 3-வது முறையாக போட்டிக்கு வரும் ரீ ரிலீஸ் படம்

எல்லோரும் படத்தை பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்றார்கள், நீங்கள் எதுவும் சொல்லவில்லையே என்று கவுண்டரை பார்த்து கேட்டிருக்கிறார் சிவாஜி கணேசன்.அதற்கு கவுண்டமணி உங்களை எல்லோரும் நடிப்பில் பெரிய ஜாம்பவான் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த படத்தில் நீங்கள் குழந்தை மிதித்து இறந்து விட்டீர்கள் என்று கலாய்த்து உள்ளார்.

இப்படி கவுண்டர் பேசியதை கேட்ட சிவாஜிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லையாம். செல்லமாக கவுண்டமணிக்கு இரண்டு அடி கொடுத்தாராம். கவுண்டமணி இப்படி சொல்லியதை கேட்டு சிவாஜி, படத்தின் அந்த காட்சியை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தாராம்.

Trending News