வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கவுண்டமணியுடன் கூட்டணி போடும் சிவகார்த்திகேயன்.. 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ என்ட்ரி தரும் நக்கல் மன்னன்

எத்தனை எத்தனையோ நகைச்சுவை ஜாம்பவான்கள் வந்தாலும் கவுண்டமணியின் அலப்பறைகளுக்கு இன்றளவும் தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் இருக்கிறது. அதிலும் ஹீரோக்களையே நக்கல் செய்து தன்னுடைய பாணியில் இவர் கொடுக்கும் கவுண்டர் ரசிகர்களை உருண்டு புரண்டு சிரிக்க வைக்கும்.

அப்படிப்பட்ட இவர் சில காலங்களுக்குப் பிறகு நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ள ஆரம்பித்தார். இதற்கு முக்கிய காரணம் புதுப்புது காமெடியன்களின் வரவு தான். இளைய தலைமுறைக்கு வழி விட்டு ஒதுங்கி இருந்தாலும் அவ்வப்போது சில படங்களிலும் இவர் நடித்து வந்தார். அந்த வகையில் இந்த நக்கல் மன்னன் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய மறுபிரவேசத்தை கொடுக்க இருக்கிறார்.

Also read: சிவகார்த்திகேயனுக்கு பெரிய கும்பிடா போட்ட 5 இயக்குனர்கள்.. உச்சாணி கொம்பை வளைத்த வெங்கட் பிரபு

அதாவது இவர் கடைசியாக வாய்மை என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இதற்கு முன்பு அவரை தேடி பல வாய்ப்புகள் வந்தாலும் அதை தட்டிக் கழித்து வந்த கவுண்டமணி இந்த பட கதை பிடித்திருந்ததால் ஓகே செய்திருக்கிறார்.

இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இந்த படத்தில் மற்றொரு நம்ப முடியாத சஸ்பென்சும் இருக்கிறது. அதாவது இப்படத்தில் ஒரு முக்கிய சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சம்மதித்துள்ளார். மேலும் அவருடைய இந்த கேரக்டர் படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்குமாம்.

Also read: கவுண்டமணிக்காகவே செயல்பட்ட சென்சார் போர்டு.. அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைக்கு போட்ட தடா

இது ஒரு காரணமாக இருந்தாலும் கவுண்டமணி படத்தில் நடிப்பதே பெரும் பாக்கியம் என்ற காரணத்தினால் சிவகார்த்திகேயனும் மறுக்காமல் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த இரண்டு நக்கல் மன்னர்களின் கூட்டணி ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் இப்படத்தில் கவுண்டமணி கழுதை மேய்ப்பவராக வருகிறாராம். இதற்காக 35 கழுதைகளை படக்குழு பிரத்தியேகமாக கொண்டு வர இருக்கிறார்களாம். இப்படி அனைத்து வேலைகளும் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் விரைவில் வர இருக்கிறது. அந்த வகையில் கவுண்டரின் காமெடி காண ரசிகர்கள் பேராவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Also read: 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நக்கல் மன்னன்.. ஊரையே வளைத்துப் போடும் மொத்த சொத்தின் மதிப்பு

Trending News