கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் அளவுக்கதிகமாக பேசப்படுவது பயில்வான் ரங்கநாதன் சொன்ன கவுண்டமணி விஷயம்தான். சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கவுண்டமணி எப்போதுமே ட்ரெண்டிங்கில் தான் இருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதன் கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை செய்த கிசுகிசுக்களை ஓபன் ஆக தெரிவித்து வருவதால் அவர் மீது பலரும் கடுப்பில் உள்ளனர்.
அப்படி சொல்லும் போது தான் கவுண்டமணி வெள்ளைத்தோல் நடிகை ஒருவருடன் நீண்ட காலமாக உறவில் இருந்ததாகவும், அவருக்கு சொந்தமாக பிளாட் வாங்கி கொடுத்து அடிக்கடி சென்று வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
அந்த செய்தி கிடைத்ததுமே அந்த நடிகை யார் என்பதை தேடுவதில் அனைவரும் ஆர்வம் காட்டினர். பெரும்பாலும் கவுண்டமணி டூயட் பாடிய நக்மா தான் என பலரும் கூறினார்கள். ஆனால் அது அவர் இல்லையாம்.
கவுண்டமணியின் ரகசியக் காதலியாக இருந்தவர் தொடை அழகு பெயர் போன நடிகை தான் என அடித்துச் சொல்கிறது கோடம்பாக்கம். அவர்கள் ஒன்றாக இருந்த காலகட்டங்களிலேயே அரசல் புரசலாக கிசுகிசுக்கள் வந்ததாம். ஆனால் அதை யாருமே பெரிதுபடுத்த ஆர்வம் காட்டவில்லையாம்.
ஆனால் தற்போது பயில்வான் சொன்ன பிறகு இந்த செய்தி இணையத்தில் பரபரப்பை பற்ற வைத்தது. இதனால் கவுண்டமணி தரப்பு கொஞ்சம் அப்செட்டில் உள்ளது. என்ன இருந்தாலும் இப்படி சொல்லலாமா? என பயில்வான் மீது நெகட்டிவ் விமர்சனங்களை நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர்.
