புதன்கிழமை, நவம்பர் 20, 2024

கவுண்டமணி உச்சத்தில் இருந்தபோது சம்பளம் எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா! தலைவர் அப்பவே வேற ரகம்!

தமிழ் சினிமாவில் இன்று புள்ள பூச்சி நடிகர்கள் எல்லாம் காமெடி செய்கிறேன் என்று மக்களை கொலையாக கொன்று வருகின்றனர். இன்றைக்கு பொறுத்தவரையில் காமெடி என்றால் இரட்டை அர்த்த வசனங்கள் தான்.

இரட்டை அர்த்த வசனங்கள் அப்போது இல்லை என்று சொல்லவில்லை, அப்போது அதுவும் ஒரு பகுதியாக இருந்தது அவ்வளவுதான். மற்றபடி உடல் மொழியாலும், வசன உச்சரிப்பால் மிரட்டிய ஜாம்பவான்கள் எத்தனை பேர்.

நாகேஷ், கவுண்டமணி செந்தில், வடிவேலு, சிந்தனைக் காமெடியாளர் விவேக் என பலரையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வகையில் கவுண்டமணி எப்போதுமே அனைவருக்கும் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.

நக்கலும் நையாண்டியும் கலந்த தன்னுடைய காமெடி காட்சிகளால் அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார். கவுண்டமணி டென்ஷன் ஆகி நடிக்கும் காட்சிகளுக்கு இன்றும் தொலைக்காட்சிகளில் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக நடித்து பின்னர் முழுநேர காமெடியனாக மாறி தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார் கவுண்டமணி. கவுண்டமணி தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு ஒரு படத்திற்கு 35 லட்சம் சம்பளம் கொடுத்தார்களாம்.

அப்போது ஹீரோவாக நடித்த பல முன்னணி நடிகர்களுக்கும் அவ்வளவு சம்பளம் இல்லையாம். ஆனால் கவுண்டமணி ஒரு படத்தில் நடித்தால் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அவருக்கு தயாரிப்பாளர்கள் லட்ச லட்சமாக கொட்டி கொடுத்தார்களாம்.

goundamani-cinemapettai-01
goundamani-cinemapettai-01

இன்று ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கினாலும் மக்களுக்கு திருப்தியான காமெடி காட்சிகளை கொடுக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு ரசிகர்கள் ரசிக்கும் காமெடியனாக இருப்பது யோகி பாபு மட்டும் தான்.

- Advertisement -spot_img

Trending News