கவுண்டமணியின் 82 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரைப் பற்றிய நிறைய சுவாரசியமான செய்திகள் தொடர்ந்து இணையதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டு அதில் வெற்றி நடைபோட்ட காமெடி நடிகர்களில் கவுண்டமணி மிக முக்கியமானவர். இவருடைய நக்கல் நையாண்டி இன்னுமும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
ஒரு காலகட்டம் வரை தொடர்ந்து காமெடி காட்சிகளில் நடித்து வந்த கவுண்டமணி ஹீரோவாகவும் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை.
கவுண்டமணி 1964ம் ஆண்டு நாகேஷ் நடிப்பில் வெளியாக சர்வர் சுந்தரம் படத்தில் முதன் முதலாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கவுண்டமணி நிறைய படங்களில் செந்திலுடன் கூட்டணி அமைத்து பல வெற்றி காமெடி காட்சிகளை கொடுத்துள்ளார். மேலும் சினிமாவில் வெற்றிகரமான கூட்டணியாகவும் வலம் வந்தனர். கவுண்டமணி செந்தில் இல்லாமல் தனியாகவும் பல படங்களை தாங்கி வென்றுள்ளார்.
கவுண்டமணியின் காமெடி காட்சிகளுக்காகவே ஓடிய படங்களும் உண்டு. சமீபகாலமாக காமெடி நடிகர்களுக்காக படம் பார்க்கும் ஆசையே விட்டுப்போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு காமெடி காட்சிகள் மிகவும் மோசமாக வந்து கொண்டிருக்கின்றன.