ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கொரானாவுக்காக கவுண்டமணி வெளியிட்ட உருக்கமான பதிவு.. கண்கலங்கிய ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் காமெடி நடிகராக வலம் வந்த கவுண்டமணி தற்போது உலகையே தலைகீழாக புரட்டி போட்டு வரும் கொரானாவைப் பற்றி பதிவு போட்டது ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.

எந்த ஒரு விஷயத்திற்கும் வெளியில் தலைகாட்டாத கவுண்டமணி இந்த முறை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியில் வந்தது அனைவருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.

எப்போதுமே சினிமா வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என பிரித்துப் பார்த்து பொது இடங்களில் பெரிதாக பந்தா காட்டாமல் அமைதியாக வாழ்ந்து வருகிறார் கவுண்டமணி. இத்தனைக்கும் தமிழ் சினிமா நடிகர்களில் படங்களில் மட்டும் என்னை ரசியுங்கள் என்று கூறிய முதல் நடிகர் இவர் என்று கூடச் சொல்லலாம்.

ஒரு காலகட்டம் வரை காமெடி நடிகராக வலம் வந்து கவுண்டமணி சமீபகாலமாக சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். ஆனால் காமெடி நடிகராக இருந்த அளவுக்கு ஹீரோவாக அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இருந்தாலும் தற்போது வயது முதிர்வின் காரணமாக பெரும்பாலும் பல படங்களை ஒப்புக்கொள்ளாமல் இருந்து வருகிறார். தற்போது கொரானா உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது.

இதுகுறித்த கவுண்டமணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன். தயவுசெய்து உள்ளே தங்கி தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசரநிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள்! என்ற பதிவை போட்டுள்ளார். கவுண்டமணிக்கு ட்விட்டர் அக்கவுண்ட் இருக்கிறதா என்பது சந்தேகமாக இருந்தாலும் இந்த பதிவு அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது.

goundamani-tweet-about-corana
goundamani-tweet-about-corana

Trending News