வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கவுண்டமணி வில்லனாக மிரட்டி சூப்பர் ஹிட்டான 5 படங்கள்.. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் பக்கவான லிஸ்ட்!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி நடிகர்களுள் கவுண்டமணியும் ஒருவர். இவரது நடிப்பில் வெளியான காமெடி காட்சிகள் அனைத்துமே இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. கவுண்டமணி காமெடியாக பல படங்கள் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் வில்லனாக கிட்டத்தட்ட 8 படங்களில் நடித்துள்ளார். இவர் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களின் பட்டியல் தற்போது பார்க்கலாம்.

goundamani
goundamani

ராஜாத்தி ரோஜாக்கிளி: சுரேஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ராஜாத்தி ரோஜாக்கிளி. இப்படத்தில் நளினி, ராஜேஷ் மற்றும் செந்தில் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். காமெடி கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்த கவுண்டமணி இப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். வாழ பழுத்திருக்கு என்ற பாடலில் கவுண்டமணியுடன் அனுராதா ஒரு கவர்ச்சி குத்தாட்ட பாடலில் ஆடியுள்ளார்.

ஞானப்பழம்: பாக்யராஜ் நடிப்பில் உருவான திரைப்படம் ஞானப்பழம். இப்படத்தில் சுகன்யா, வினிதா மற்றும் ரேகா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் சுகன்யாவிற்கு அண்ணனாக கவுண்டமணி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

16 வயதினிலே: கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 16 வயதினிலே. இப்படத்தில் ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் மற்றும் கவுண்டமணி நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினிகாந்த் வில்லன் கதாபாத்திரம் நடித்திருந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் கவுண்டமணியும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் சேர்ந்து கவுண்டமணியின் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

பொன்மன செல்வன்: விஜயகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் பொன்மனசெல்வன். இப்படத்தில் ஷோபனா மற்றும் வித்யா ஸ்ரீ போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கவுண்டமணி வில்லனாக நடித்துள்ளார். விஜயகாந்துடன் கவுண்டமணி வில்லனாக நடித்த முதல் திரைப்படம் இதுதான். இப்படத்தில் கவுண்டமணி வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.

ரகசிய போலீஸ்: சரத்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ரகசிய போலீஸ். இப்படத்தில் நகுமா, ராதிகா மற்றும் செந்தில் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இதில் சரத்குமாருக்கு வில்லனாக கவுண்டமணி நடித்துள்ளார். இப்படத்தில் கவுண்டமணியின் வில்லத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றது.

அந்தப் படங்களைத் தவிர பேர் சொல்லும் பிள்ளை, ஆவாரம் பூ மற்றும் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் போன்ற படங்களிலும் கவுண்டமணி வில்லனாக நடித்துள்ளார்.

Trending News