தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் தான் கவுண்டமணி. இவருடைய காமெடிகள் அந்தக் காலம் முதல் தற்போது உள்ள தலைமுறை வரை அனைத்து ரசிகர்களையும் கவரும் விதமாக உள்ளது. இந்நிலையில் கவுண்டமணி பெரும்பாலும் பட விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமாட்டார்.
அரிதாக சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்ளும் போது அவருடைய நையாண்டி ஆன பேச்சுக்கு அரங்கம் முழுவதும் சிரிப்பொலி எழும். இந்நிலையில் கவுண்டமணி காசு விஷயத்தில் மிகவும் கறாரானவராம். ஒரு ரூபாயாக இருந்தாலும் அதை கணக்கு பார்க்க கூடியவராம்.
இந்நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் ஒரு ரூபாய் கூட நீங்கள் விடமாட்டீர்களே என கேட்டுள்ளனர். அதற்கு ஒரு சுவாரஸ்யமான கதையுடன் பதிலளித்துள்ளார் கவுண்டமணி. அதாவது காந்தி இறப்பதற்கு முன்பு ஒரு அரங்கில் பேசிக்கொண்டு இருந்தாராம்.
அப்போது அந்த அரங்குக்குள் மக்கள் செல்ல வேண்டுமென்றால் டிக்கெட் எடுக்க வேண்டுமாம். ஆனால் அப்போது காந்தியை சுட வந்த நபர் டிக்கெட் எடுக்கவில்லையாம். இதனால் அங்குள்ள காவலாளியிடம் ஒரு ரூபாயை கொடுத்துவிட்டு உள்ளே சென்றுள்ளார்.
அதன் பிறகு தான் அந்த நபர் காந்தியை சுட்டு கொன்றார். அந்த ஒரு ரூபாய் தான் காந்தியின் உயிருக்கு ஆபத்தாக அமைந்தது. இப்போது ஒரு ரூபாயின் மதிப்பு புரிகிறதா என்ற அந்தப் பேட்டியாளர் இடம் கேட்டார். அதனால் ஒரு ரூபாய் தானே என்று எதையும் சாதாரணமாக சொல்லிவிட முடியாது என கவுண்டமணி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
கவுண்டமணி சினிமாவிலும் ரசிகர்களுக்கு இது போன்ற நிறைய கருத்துக்களை சொல்லியுள்ளார். அதேபோல் ஒவ்வொரு சம்பவத்தையும் எடுத்துக்காட்டாக கொண்டு தனது வாழ்க்கை மிகவும் கவனமாக செலவு செய்யக் கூடியவர். இந்நிலையில் மீண்டும் கவுண்டமணியின் ரீ-என்ட்ரிகாக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.